ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் |Srirangam temple elephant andal |namma Trichy|aanmeegam |elephant |
Автор: Open Talk Tamil
Загружено: 2023-03-01
Просмотров: 26538
#srirangamtemple
#tamilnews
#elephant
திருச்சி - 28.02.2023
ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் பிறந்தநாள் கொண்டாட்டம் - பழங்கள் வழங்கி மகிழ்ந்த திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள்.
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில், அதிகாலை விஸ்வரூப தரிசனம் தொடங்கி இரவு நடை சாற்றும் வரையிலும் நடைபெறும் கைங்கரிய நிகழ்வுகளில் மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களிலும் திருக்கோவில் கோவில் யானை ஆண்டாள் முக்கிய பங்காற்றுகிறது.
அதன்படி 28.02.1979ல் பொள்ளாச்சி வனப்பகுதியில் பிறந்த ஆண்டாள் யானையானது காரமடை பெருமாள் கோவிலில் சேவைபுரிந்து வந்தது, ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு ஆசீர்வாதம் செய்யும் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் திருக்கோவில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக 17.10.1986ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆண்டாள் யானை 45வது வயதை எட்டும் நிலையில், திருக்கோவில் சார்பில் யானைக்கு பிறந்தநாள் விழா இன்றுமாலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
கோவில் யானை ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, மேலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் வகை,வகையான பழங்களை வழங்கியதை ஆண்டாள் குஷியுடன் சாப்பிட்டு மகிழ்ந்தது. தொடர்ந்து யானை ஆண்டாள் பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: