உத்திரமேரூர் | மயானக் கொள்ளை | 2022 | Uthiramerur | Mayana kollai | Angala Parameshwari | UTRMC.
Автор: Taste With KuKu
Загружено: 2022-03-04
Просмотров: 10204
உத்திரமேரூர் 2022 -
உத்திரமேரூர் அங்காளம்மன் கோவிலில் நடத்தப்படும் மயான கொள்ளை உற்சவம், கோலாகலமாக நடந்தது.
உத்திரமேரூரில் பிரசித்தம் பெற்ற அங்காளம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசை அன்று, மயான கொள்ளை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு, மஹா சிவராத்திரியான நேற்று முன்தினம் துவங்கியது.
அன்று, பூங்கரகம், சக்திகரகம், அக்னிகரகம் ஏந்தி, வாத்திய இசைகளுடன் புஷ்ப விமானத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.மயான கொள்ளை உற்சவமான நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.
மலர் அலங்காரத்திலும், சிம்ம வாகனத்திலும் எழுந்தருளிய அம்மன், உத்திரமேரூர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்; பக்தர்கள் அலகு குத்தி, டிராக்டர், லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரங்களில் அந்தரத்தில் தொங்கி, பறவைக் காவடி எடுத்து வந்தனர்.மயான கொள்ளை விழாவால், உத்திரமேரூர் நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதன் காரணமாக காலை முதல் மாலை வரை உத்திரமேரூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
மாலை 6:00 மணிக்கு மயான கொள்ளை உற்சவம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டு சென்றனர்.
உத்திரமேரூர் | மயானக் கொள்ளை | 2022 | Uthiramerur | Mayana kollai | Angala Parameshwari | UTRMC.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: