விக்கிரவாண்டி சுங்கசாவடி வாகன நெரிசல் கழுகு பார்வை psdnews24x7
Автор: psd news 24x7
Загружено: 2025-10-18
Просмотров: 170
#விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் #மேம்பாலப் பணி காரணத்தால் விக்கிரவாண்டி- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு – போக்குவரத்து மாற்று வழி ஏற்பாடு.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், இருவல்பட்டு, முண்டியம்பாக்கம், பாப்பம்பட்டு, ஜக்காம்பேட்டை உள்ளிட்ட ஏழு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால், இதுபோன்ற பண்டிகை காலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு அதிகமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்வதால், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் இருந்து மாற்று வழியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
போக்குவரத்து போலீசாரின் ஏற்பாட்டின்படி, அனைத்து வாகனங்களும் கோலியனூர் மற்றும் சுந்தரி பாளையம் வழியாக ஜானகிபுரம் நோக்கி அனுப்பப்பட்டு, அங்கிருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
#news #villupuram #depavali
இதன் மூலம் நெரிசல் குறைக்கப்படுவதுடன், வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: