IRULAS TV

WELCOME TO IRULAS TV

THANKS TO YOUTUBE TEAM

யூடியூப் நிறுவனத்திற்கும்

இந்த வாய்ப்பை எங்களுக்கு தந்தமைக்கு எங்களது சமூகத்தின் சார்பாக வணங்கி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
உலகத் தமிழர்களுக்கும் உலகத்தாருக்கும் எங்களது பணிவான வணக்கம் பூர்வகுடி யான பழங்குடி இருளர் மக்களாகிய நாங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறோம் எங்களுக்கு வரலாறு இல்லை என்று கூறுகின்றனர் தமிழ் சங்க இலக்கிய நூல்களிலும் கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எங்களது சமூகத்தை பற்றி குறிப்பிட வில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் அதனால் என்னவோ நாங்கள் சமூகத்தோடு ஒன்றி வாழாமல் தனித்து நீர்நிலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வருகிறோம் மக்களோடு மக்களாக நாங்கள் வாழ ஆசைப்படுகிறோம் ஆனால் எங்களுக்கு கூச்சம் அதிகம் தாழ்வு மனப்பான்மை அதிகமாகவே உள்ளது எங்களுக்கு அதனால் முன்னேற்றம் அடைய வெகு காலத்தை நோக்கி உள்ளோம் இப்போது யூடியூப் தந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி எங்களுடைய சமூக வரலாற்றை பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம் இதற்கு உலக தமிழர்கள் உலகத்தார் ஆதரவு அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்