Buffoon Tamil

பஃபூனின் பயணம் பண்பாட்டு வேர்களை ஆழமாகவும் உயிர்ப்பு மாறாமலும் பதிவு செய்வது. ஆவணப்படுத்துவது.

இன்றைய நவீன காலத்தில் தமிழகம் மட்டும் அல்ல, உலகமே தனக்குரிய அடையாளத்தை (விவசாயம், உணவு,உடை, திருவிழா,நாட்டுப்புறக் கலைகள், கலைஞர்கள்…) இழந்து கொண்டிருகிறது. இதனால், வளர்ந்து வரும் தலை முறைக்குத் தமது வேர் பற்றிய பெருமிதமோ புரிதலோ முற்றிலும் இல்லை. இவர்களது வாழ்க்கைச் சூழலும் வேறொன்றாக மாறிவிட்டது.ஆனாலும் இவர்களுக்குப் பண்பாட்டைக் கடத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆதலால்,

தமிழகம் முழுக்க ஆய்வு செய்து களத்தில் நின்று, படம்பிடித்து… அசலாக உண்மைத் தன்மை மாறாமல் வழங்குவதே ‘பஃபூன்’ சேனலின் நோக்கம்.

வெளிநாட்டில் வாழும் கோடான கோடித் தமிழர்களையும் இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களையும் மற்றும் இளந் தலைமுறையினரையும் பண்பாட்டு அடையாளத்தால் இணைக்கும் முயற்சி.