பழங்குடியினருக்குப் பல்கலைக் கழகம் வேண்டும் _ Exclusive university for tribal | BUFFOON TAMIL
Автор: Buffoon Tamil
Загружено: 2025-12-14
Просмотров: 33
ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தைச் சேர்ந்த தோழர் வி.பி.குணசேகரனின் குடும்பம் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களைச் சார்ந்தது. அவருடைய தந்தை இரண்டு முறை அவ்வூரின் பஞ்சாயத்து சேர்மனாக இருந்தவர். தீவிர காங்கிரஸ் சார்புள்ளவர். பொறியியல் பட்டப்படிப்பை முடித்த குணசேகரனுக்கு நாசிக்கில் ஒரு நிறுவனத்தில் நல்ல பணி அமைந்தது. வேலை வாய்ப்பின்மையின் கோரப்பிடியில் நாடே தத்தளித்துக்கொண்டிருந்த அக்காலத்தில் அந்த வேலையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு வருட காலம் அங்கு வேலை செய்கிறார். வாழ்வுக்கு வருவாய் கிடைத்தபோதிலும் மனம் எப்போதும் தனது சொந்த மக்களையும், அவர்களின் முன்னேற்றம் குறித்தும் சிந்தித்தபடியிருந்ததால் ஒரு வருட காலத்துக்குப் பிறகு வேலையை உதறிவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.
இந்திய வனங்களைச் சூறையாடுவதற்கான விதைகளை விதைத்தது ஆங்கிலேயர்கள்தான். நிலத்தைப் பங்கிட்டு சொந்தம் கொண்டாடும் சுயநலமற்றிருந்த பழங்குடி மக்களிடமிருந்து பல்லாயிரம் ஏக்கரளவில் நிலங்களை அபகரித்து, தேயிலை எஸ்டேட்டுகளையும் ரப்பர் எஸ்டேட்டுகளையும் உருவாக்கினார்கள்
பெருநகர பாலங்களைக் கூரைகளாகவும், செப்பனிடப்பட்ட பூங்காக்களில் மனித மூட்டைகள்போலும், உணர்வுகள் மரத்துப்போன அயர்ச்சியில் உறங்கும் மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா? கிடைத்ததைக்கொண்டு பசியாறியும், உறைவிடமென ஏதுமில்லாமல் நாடோடிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களில் பலரது வாஞ்சை, திக்குத் தெரியாமற்போன தமது வாழ்நிலங்களுக்கு என்றாவது திரும்பிவிட மாட்டோமா என்பதே. கண்களில் ஒளியும் நம்பிக்கையும் குன்றி, அச்சிறு குழிகளில் ஏக்கத்தை இட்டு நிரப்பி வாழ்கின்றனர். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பிழைப்புக்காக நகர்ந்துகொண்டேயிருக்கும் லட்சக்கணக்கான மனிதர்கள் நம் கண்முன்னாலேயே தங்களது அடையாளத்தை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உயிருக்கும், உடைமைக்கும், உடல்நலனுக்கும் அடிப்படை உத்தரவாதமில்லாமல், சாமானியனின் வாழ்வுகூட வாய்க்கப் பெறாத இவர்களில் பெரும்பாலானோர் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த பழங்குடி மக்கள். வர்த்தகத்தையும், வியாபார இலக்குகளையும் நோக்கி நகர்ந்துசெல்லும் அரசாங்கங்கள் இயற்கையின் அடிமடியைச் சுரண்டி பழங்குடி மக்களின் நிலங்களைச் சூறையாடி, அவர்களது வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்கிறது.
Youtube : @buffoontamil
Instagram: @buffoontamil
X : @buffoontamil
Do watch... Share ... Subscribe .... and support us
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: