உழவனின் ராஜா

உயிர் காக்கும் அனைத்து உழவு சொந்தங்களுக்கு வணக்கம்🙏
உழவோடும் உழவனோடும் நான் உங்கள் உழவனின் ராஜா யூடியூப் சேனல் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
“மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த பெருமை மிக்க நாடு”- நம் நாடு.
உழவின் விலை நிலம் தான், உழவனின் உற்பத்தி மையம்
நமது சேனலில் வேளாண்மை செய்ய தேவையானஅனைத்து வழிமுறைகள் குறிப்பாக பருவம் மற்றும் இரகங்கள், நிலம் பண்படுத்துதல், உழவு முறைகள், உர நிர்வாகம்,நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, அறுவடை, மகசூல்& பயிர் சாகுபடி செலவு அவற்றை எவ்வாறு சந்தைப்படுத்துதல் மற்றும் எந்த பட்டத்தில் என்ன பயிர் செய்வது? பாரம்பரிய வேளாண் யுத்திகள்? போன்ற அனைத்து வேளாண் விவரங்களையும் தெளிவாக விளக்க இருக்கிறோம்.
எங்களின் நோக்கமே‌!
இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பது தான் ஆனால் இரசாயன வேளாண்மையே மேலோங்கி இருக்கிறது. அதிலிருந்து இயற்கை வேளாண்மையை மாற்றுவதே எங்கள் நோக்கம்.அதற்கான முதல் முயற்சியாக (இல்லை. இல்லை) முதல் பயிற்சியாக இதை நாங்கள் கையில் எடுத்து உள்ளோம்.
எங்களின் தாரங்க நாதம்
உழவை கற்போம்!
உழவனை காப்போம்!!