Vetrisaipadal

தமிழ் கத்தோலிக்க திரு அவை கானங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் குரலறுவிசைப் பிரிப்பு செய்யப்பட்டு (குரல் + அறு + இசை = குரல் நீக்கம் செய்யப்பட்ட பின்னனி இசை), இசைக் கோர்ப்பு மெருகேற்றப்பட்டு, வெற்றிசைப் பாடல்களாக (Karaoke) Youtube Channel-இல் வெளியிடப்படுகிறது. 500க்கும் மேலான வெற்றிசைப்பாடல்களோடு, தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதிய பாடல்கள் பதிவேற்றப்படுகின்றன.

குறிப்பு:

கத்தோலிக்கத் திருஅவையின் படிப்பினையின் படி, திருப்பலியில் இவ்வகை வெற்றிசைப்பாடல்கள் பயன்படுத்தக்கூடாது. ஆனால், இறைஇசை ஆர்வலர்களுக்கும், பாடல் கற்போருக்கும் இது ஒரு பயனுள்ள ஊடகம். பொது நிகழ்வுகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும் சினிமா பாடல்களை விடுத்து, இறை இசைப் பாடல்களின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதில், இவ்வெற்றிசைப்பாடல்கள் தூண்டுகோளாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. "இசையோடு இணைந்து பாடுவோம்; இறைவனைப் புகழ்வோம்"

-அருட்பணி. ஜோசப் அரா க.ச.

Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. Let's spread the gospel via music!