Thiruvannamalai Arunachalaeswarar Temple || Annamalaiyar Temple || Lord Shiva || Temple of Fire
Автор: Siddhargal Valipadu
Загружено: 2023-12-10
Просмотров: 104
Thiruvannamalai Arunachalaeswarar Temple || Annamalaiyar Temple || Lord Shiva || Temple of Fire
நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை || Thiruvannamalai temple || Siddhargal valipadu
திருவண்ணாமலை கோயில்
நமது பாரத தேசத்தில் பல கோயில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அமைந்துள்ள கோயில்களின் எண்ணிக்கையைச் சொல்லவே வேண்டாம். அப்படி அமையபெற்ற கோயில்களில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்ற பெருமையை பெற்றது தான் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில்.
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக உள்ளது திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும். அம்மனின் 51 சக்திப் பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதே போல் விநாயகருக்கும் அறுபடை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். இத்தல இறைவன் அருணாச்சலேஸ்வரராகவும், அம்பிகை உண்ணாமுலையம்மையாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன.
கோயில் அமைப்பு:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (ரமணம் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், திருமண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில் இது. சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது சிறப்பு.
கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும்.
இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர்.
இவை தவிர கிரிவலப்பாதையில் கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், அஷ்டலிங்கங்கள், எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இடைக்காடர், குகை நமச்சிவாயர், இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம், மூக்குப் பொடி சித்தர் போன்றவை உள்ளன.
திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும்.
இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 5 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் அனைவரும் இத்தலம் வந்து அருணாச்சலேஸ்வரரையும், அன்னை உண்ணாமுலையையும் வணங்கி அருளாசிகள் பெறவும், முக்தி பெறவும் எல்லாம் வல்ல ஈசனை வேண்டி பணிகிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
குருவே சரணம் .
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஜெய குரு ராயா .
S. Muthukrishnan
Pudukkottai.
9443955093
#TiruvannamalaiTemple #ibctamil #KarthigaiDeepam #karthigaideepamspecial
#karthigaideepam2022 #TiruvannamalaiTempleAboutSiddhar #siddharlife #siddhargalvalipadu #jeevasamadhi #aanmeegam #siddhargal #kanakkanpatti #girivalam
#padalalingam #thiruvannamalai #thiruvannamalaisiddhargal #thiruchitrambalam #siddhargaljeevapeedam #sivan
#tiruvannamalaitemple #annamalaiyartemple #arunachala #panchaboothasthalam #agnisthalam #agnilingam #deepam #ramanamaharishi #arunagirinathar #templesoftamilnadu #templesofindia #lordshiva #tamilnadutemples #spritualplace #powerfulltemple #arunachalam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: