திருக்குரக்காவல் குண்டலகர்னேஸ்வரர் தொழில்அபிவிருத்தி தரும் சிவபக்த ஆஞ்சநேயர் 27நட்சத்திர பரிகார தலம்
Автор: ஆன்மீகத்துடன் நட்பு
Загружено: 2023-12-01
Просмотров: 12774
திருக்குரக்காவல் குண்டலகர்னேஸ்வரர்
திருக்கோயில் திருகுரக்கா(28/274)
மூலவர்: திருக்குரக்காவல் குண்டலகர்னேஸ்வரர்
அம்பாள்: குந்தளாம்பிகை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: கணபதி நதி
புராண பெயர்: திருக்கரக்காவல்
ஊர்: திருக்குரக்கா
மாவட்டம்: மயிலாடுதுறை
பாடியவர்
திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 28வது தலம்.
திருவிழா
சிவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி.
தல சிறப்பு
இங்கு சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து,
சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 28 வது தேவாரத்தலம் ஆகும்.
பொது தகவல்
பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன்,
கோஷ்டத்தில் வனதுர்க்கை,
கிராம தேவதையான செல்லியம்மன்
ஆகியோர் உள்ளனர்.
பிரார்த்தனை
கால்நடைகள் வைத்திருப்போர் செல்லியம்மனை வேண்டிக் கொண்டால்
அவை நோயின்றி இருக்கும் என்பது நம்பிக்கை.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குந்தளநாயகி அம்பாளுக்கு
வளையல் அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.
தலபெருமை
சிவ ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது.
திருமால், ராமாவதாரம் எடுத்தபோது,
அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார்.
எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார்.
அவ்வகையில் இத்தலத்தில் சிவனே,
தன்னை வழிபடும் கோலத் தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
எனவே இவரை, "சிவஆஞ்சநேயர்' என்றும்,
"சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள்.
இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார்.
ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.
சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து,
சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.
சிறப்பம்சம்
அம்பாள் குந்தளநாயகி தனிச் சன்னதியில் அருளு கிறாள்.
வில்வம் இத்தலத்தின் விருட்சம்.
திருநாவுக்கரசர் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளார்.
இக் கோயிலில் தெட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார்.
தல வரலாறு
சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர்,
லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார்.
ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார்.
இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே,
ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார்.
அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர்,
ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார்.
மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார்.
அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த
குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார்.
ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால்,
இத்தல சிவன் "குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.
கோயில் அமைப்பு
பஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா தலமும் ஒன்று.
மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா.
குரங்கு வழிபட்டதால் இத்தலம் திருக்குரக்குக்கா என்று பெயர் பெற்றது.
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை.
ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது.
முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம் நந்தி உள்ளன.
கொடிமரமில்லை.
வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன.
முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் உள்ளன.
வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும்,
வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன.
சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சனேயர் கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது.
அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது.
இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது.
இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே.
ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.
வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து,
சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறது.
இது ஊர் மக்கள் இன்றளவும் பார்க்கும் உண்மை சம்பவமாகும்.
ஆஞ்சனேயர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால்,
பிரார்த்தனை
சூரியன் மற்றும் சனியினால் ஏற்படக்கூடிய தோஷம் உடையவர்கள் இத்தலம் வந்து
இறைவனையும் ஆஞ்சனேயரையும் வழிபட தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வார்கள்.
ஆலய தீர்த்தம் கணபதி நதி எனப்படும் பழவாறு.
இதில் நீராடினால் புத்திர பாக்கியம் ஏற்படும்,
திருமணத் தடை நீங்கும்.
இருப்பிடம்
மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ., தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் "#இளந்தோப்பு" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் மூன்று கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்ல முடியும்.
கோயில் Google Map Link
https://maps.app.goo.gl/iSS66RafEbiHK...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 7708820533
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support Our Channel via UPI Id
nava2904@kvb
Join Our Channel Whatsapp Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...
Join this channel to get access to perks:
/ @mathinam2301
தமிழ்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: