திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் | 2 நொடி மட்டுமே காட்சி தரும் மூலவர் | திரையில் பீம ருத்திரர்
Автор: ஆன்மீகத்துடன் நட்பு
Загружено: 2024-01-22
Просмотров: 9778
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில்
மூலவர்: வாமனபுரீஸ்வரர்
அம்பாள்: அம்புஜாக்ஷி
தலவிருட்சம்: கொன்றை
ஊர்: திருமாணிக்குழி
மாவட்டம்: கடலூர்
தலவரலாறு
மகாபலியின் தலைமீது கால்வைத்து அவனை பூமியோடு அழுத்தி அழித்த வாமனப் பெருமாள் பூஜித்த தலம் இது. வாமனப் பெருமாள் பூஜித்தபோது பிரமாண்டமாக இருந்த தன் திருவுருவை அவர் வசதிக்காக, சுருக்கி காட்சி அளித்த புண்ணியத் தலம் இது.திருமாணிக்குழி என்ற பெயருக்குக்காரணம் என்ன? ஒருமுறை இந்திரனின் தாயார் ஆதிதேவி பூஜை செய்தபோது விளக்கில் உள்ள நெய் உறைந்துபோக, அதனால் தீபம் அணையும் நிலையில் அலைபாய்ந்தது. அப்போது பசியால் அலைந்து திரிந்த ஒரு எலி அந்த நெய்யை சாப்பிட வந்தது. அதன் மூக்கு, திரியை தூண்டி விட்டதில் தீபம் பிரகாசமானது. தற்செயலாக நிகழ்ந்தது எனினும், தீபத்தைச் சுடர்விடச் செய்ததற்காக இறைவன் மகிழ்ந்து அந்த எலியை அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய் பிறக்கச் செய்தார். அரசனாகப் பிறந்தாலும் தர்ம வாழ்விலிருந்து நழுவவில்லை அவன். ஆனால் தன் கொடைத்தன்மையை தானே கர்வமாக நோக்க ஆரம்பித்தான். மனதில் அகங்காரம் ஓங்கியது.தானே அறியாமல் செய்த ஓர் அற்பமான சேவைக்காகத் தனக்கு சக்ரவர்த்தி பதவியே கிடைத்துவிட்ட மமதை மேலோங்கியது. அவனது இந்த ஆணவத்தை அழித்து தன் பதம் சேர்த்துக் கொள்ள விரும்பினார், மன் நாராயணன். அதனாலேயே வாமனராக அவதரித்தார். மகாபலியிடம் சென்று, யாசகமாக மூன்றடி மண் கேட்டார். திருமாலின் தந்திரத்தை அறிந்த சுக்ராச்சார்யார் மகாபலியை எவ்வளவோ தடுத்தும், மகாபலி கேட்கவில்லை. கடவுளே கேட்கும்போது இல்லை என்று சொல்வது தர்மம் ஆகாது என்று கூறி ‘தங்கள் காலால் மூன்றடி மண்ணை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றான்.திடீரென விஸ்வரூபம் எடுத்த வாமனர், விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டையும் தன் ஈரடியால் வசப்படுத்திக் கொண்டார். மூன்றாவது அடிக்கு எங்கே இடம்? எனக் கேட்ட திருமாலிடம் ‘மூன்றாவது அடிக்கு என்னையே தருகிறேன்’ என்று கூறிய மகாபலி, திருமாலின் திருவடிகளின் கீழே அமர்ந்தார். அவருடைய பக்தியை மெச்சிய திருமால் பாதாள லோகத்தையும், சிரஞ்சீவித் தன்மையையும் மகாபலிக்கு அருளினார். மனித உருவில் வந்த வாமனப் பெருமாள், மகாபலியை வதம் செய்த தோஷம் நீங்கும் பொருட்டு திருமாணிக்குழி ஈசனை பூஜித்தார். ராமர், ராவணனை அழித்துவிட்டு அந்தப் பாவம் நீங்க ராமேஸ்வரத்தில் லிங்கத்தை நிறுவி பூஜித்ததுபோல, இங்கு வாமனர் சிவலிங்கத்தை பூஜித்தார். அதனாலேயே இத்தல சிவனுக்கு வாமனபுரீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று.தோன்றிய காலம் அறியமுடியாத சுயம்புநாதராக இருக்கிறார், வாமனபுரீஸ்வரர். எப்போதும் கருவறை திரையிடப்பட்டு மூடியிருக்கும் இந்த அபூர்வ ஆலயத்தில். தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு திருத்தலம், சேக்கிழார் வழிபட்ட தலம் என பல பெருமைகளை கொண்டது. மூர்த்தி, தீர்த்தம், வனம், கிரி, நதி சங்கமம், ஆரண்யம், பதிகம் ஆகியவற்றால் பிரசித்தி பெற்ற திவ்ய தலமிது. சிவபெருமான் பூவுலகில் தோன்றிய முதல் தலம். இதன் பிறகுதான் பிற சிவத் திருத்தலங்கள் தோன்றின என்கிறது தல வரலாறு.
தலசிறப்பு
தேவர்களுக்கு ஞானத்தை புகட்டி, அஞ்ஞானத்தை விலக்கத் தோன்றியவர் இந்த ஈசன். சதாகாலமும் இறைவியோடு ஒன்றியிருப்பதாக வரலாறு. அதனால் மற்ற கோயில்களில் விளங்கும் போகசக்தி அம்பாள், பள்ளியறை சொக்கர் போன்ற விக்ரகங்கள் இங்கு கிடையாது; திருப்பள்ளி அறையும் கிடையாது.இத்தலத்தில் சம்பந்தர் தான் பாடிய பதினொறு பாடல்களிலும் இறைவன் உயிர்கள் அனைத்தையும் உய்வித்து உதவுவதாகக் குறிப்பிடுகிறார். எனவே இறைவனுக்கு உதவிநாயகன் என்றும், இறைவிக்கு உதவிநாயகி என்றும் பெயர். தலத்தையும் உதவி திருமாணிக்குழி என்றே சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
பொது தகவல்
திருவண்ணாமலையிலும், இத்தலத்திலும்தான் கார்த்திகை மாதத்தில் மலையின் மேல் தீப ஒளியாக காட்சி கொடுக்கிறார் சிவபெருமான். இத்தலத்தை சூரியன் உண்டாக்கி, பூஜித்ததாக வரலாறு. எனவே, விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் அமைந்த ஒரே கோயில் இதுவே. திருமால் வாமன அவதாரத்தில் இங்கு வழிபாடு நடத்தியபோது இறைவன் தன் ருத்ர கணங்களில் பீமசங்கரன் என்பவரை பூஜையை காவல் காக்கும் கணமாக நியமித்தார். எனவே அவருக்கு வழிபாடுகள் செய்த பின்னரே இறைவனை தரிசிக்கும் மரபைக் கொண்டது இக்கோயில்.
பிராத்தனை
திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கள், இந்த வாமனபுரீஸ்வரரையும், அம்புஜாக்ஷியையும் வழிபட்டு சென்றால் உடனடியாக திருமணம் கைகூடுகிறது. அதற்காக சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன. அதேபோல் நோய் தீரவும், குழந்தை பாக்கியம் மற்றும் சகல செல்வங்களை பெறவும் இந்த ஈசன் அருட்பாலிக்கிறார். கண்திருஷ்டி நீங்க வழிபட வேண்டிய தலம்.
அமைவிடம்
கடலூர், திருவஹீந்திபுரம் வழியாக பண்ருட்டி செல்லும் சாலையில் 10வது கி.மீ. தொலைவில் உள்ளது. திருமாணிக்குழி நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு நடந்து செல்லலாம். கோயில் வழியாகவும் பஸ்கள் செல்கின்றன. ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.
கோயில் Google map link
https://maps.app.goo.gl/aFKw6jPi5qVb9...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 8940730248
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathinam2301
தமிழ்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: