ஒரு பயணம் | Oru Payanam | Tamil Journey Song | Govind Swaminathan |
Автор: Govind Swaminathan
Загружено: 2026-01-13
Просмотров: 143
பாடல் - ஒரு பயணம்
பாடல் வரிகள் - கோவிந்த் சுவாமிநாதன்
இசை - Suno
Image generated in Gemini
பாடல்
காலியான பஸ் ஒன்று/
வந்தது என் வழி இன்று/
அமர்ந்தேன் பயணம் செய்ய/
ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில்/
பார்ப்பேன் செல்லும் உலகத்தை/
பாடல் ஒன்றை காதில் கேட்டு/
அமையும் பயணம் ரசித்தபடி/
நின்றது வாகனம் ஒரு இடத்தில்/
ஏறிய ஒருவர் தெரிந்தவரா/
பார்த்தது போல் தோன்றவில்லை/
பழகிய உணர்வு வரவில்லை/
சென்றார் அமர என்னை கடந்து/
வாகனம் மீண்டும் highway யில்/
தூண்டும் மனதின் நினைவுகளை/
Message ஒன்று இறங்கிடவே/
பார்த்தேன் மொபைல் அந்நொடியே/
கடன் கொடுக்கும் வங்கி ஒன்று/
தூண்டும் என்னை வாங்கு என்று/
குறையும் வேகம் வாகனத்தில்/
சென்றது மெல்ல ஒரு இடத்தில்/
விழும் Gate ஓசை கொண்டு/
சொல்லும் Train வரும் என்று/
பழங்கள் விற்கும் ஒரு மங்கை/
சுற்றி வந்தாள் பேரூந்தை/
கொடுத்தேன் ஐம்பது அவள் கையில்/
பழங்கள் பையில் கொடுத்தாலே/
ஒலி எழுப்பும் ரயில் வண்டி/
ஆடி வரும் தன் உலகில்/
எட்டு பெட்டி அதில் உண்டு/
நிற்கும் எந்த தளம் கண்டு/
கடந்தது அது மெதுவாக/
இறங்கும் நிசப்தம் அது கடக்க/
எங்கோ ஒருவர் whistle ஊத/
விழிக்கும் வாகனம் வெகுவிரைவாய்/
நகர்ந்தோம் மீண்டும் பயணத்தில்/
மெல்லிய காற்று அடித்திடவே/
ஏறி இறங்கும் வாத்து கூட்டம்/
நடத்தி செல்வார் ஒருவர் அவற்றை /
சுற்றும் அவைகள் ஒரு குட்டை/
இறங்கும் அதில் ஒலி ஏழுப்பி/
இழுக்கும் மாடு வண்டி ஒன்றை/
உறங்கும் ஒருவர் அதன் மேலே/
Cement மூட்டை மணலுடனே/
யாரோ ஒருவரின் வீட்டிற்கு /
போஸ்டர் ஓட்டிய சுவர் செல்ல/
புதிய படம் திரையரங்கில்/
வாலிபன் ஒருவன் சைக்கிள் ஓட்ட/
பார்த்தான் என்னை எதற்காக/
பயணம் செய்யும் நாம் இருவர்/
பாடிக்கொண்டு நான் வரவே/
கேட்டு ரசிக்கும் அன்பு நண்பா/
வரும் பார் இறங்கும் ஊர்/
நன்றி சொல்வேன் உனக்கு நான்/
என்னுடன் பயணித்த இந்நாளில்/
மீண்டும் ஒருமுறை சந்திபோம்/
இறைவன் அருளால் நம் வாழ்வில்/
சொல்வேன் ஒன்று இறங்கும் முன்/
நன்றி என்றும் அன்புடன் நான்/
நல்லவை என்றும் உன்னை அடைய/
வேண்டுவேன் இறைவனை எந்நாளும்/
#tamilmusic #tamilmelody #tamilcalypsosongs #coversong #tamillovesongs #tamilpopsongs #lovesongs #musicsong #malayalamsongs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: