நடிகர் ஜீவா பாலமேடு ஜல்லிக்கட்டு பார்வையிட வருகைதந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
Автор: NOW INDIAR TIMES TV
Загружено: 2026-01-17
Просмотров: 79
: மதுரைக்கு வந்தது மகிழ்ச்சியடைகிறேன். நான் நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் என்ற படம் வெளியாகியுள்ள தியேட்டர்களை பார்வையிட வந்தேன். அந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தின் பூஜை, மதுரை பாண்டிகோவில், மீனாட்சி அம்மன் கோயிலில் நடத்தினோம். இந்தப்படத்தை ரிலீஸ் செய்தபிறகு மதுரை மக்களை பார்க்கவேண்டும் என வந்துள்ளேன். அந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. முதல்முறையாக ஜல்லிக்கட்டு பார்க்க பாலமேடு வந்துள்ளேன். அதனைப்பார்த்து வியந்துள்ளேன். இதுமறக்கமுடியாத அனுபவம். மதுரை மக்களின் அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாக உள்ளது. இந்தப்படம் வெளியானபிறகு ஒவ்வொரு தியேட்டராக சென்று வருகிறேன். அந்த இடைவெளியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்துள்ளேன். இப்போது நான் அந்த சினிமாவில் நடித்த உடையலங்காரத்தில் வந்துள்ளேன். எனது அம்மாவின் உறவினர்கள் பெரியகுளம், எனது பாட்டி கொடைக்கானல். பொதுவாக மதுரைக்கு 5 கிமீ பத்து கிமீ தூரத்திலுள்ளவர்கள் மதுரைக்காரன் என்பார்கள். அந்த அடிப்படையில் நானும் மதுரைக்காரன்தான். கிடாவெட்டு எனும் படத்தில் தப்புன்னே ரொம்ப தம்புன்னே என்ற பேசிய வசனம் ரொம்ப டிரெண்ட் ஆச்சு. அந்தக்கதை மதுரையை சுற்றியுள்ள கதைதான். அந்த கிடாவெட்டு பட கேரக்டர் மாதிரி நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கூறினார்கள்.
அதேபோல் வரும்காலத்தில் நான் மாடுபிடி வீரராக நடிக்கும் வாய்ப்பு கூட கிடைக்கும். என்றார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: