புகழ்பெற்ற ஓம் காளி ஆலயத்தில், புத்தாண்டு முன்னிட்டு விசேஷமான வழிபாடு நடைபெற்றது. #
Автор: NOW INDIAR TIMES TV
Загружено: 2026-01-05
Просмотров: 343
சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள புகழ்பெற்ற ஓம் காளி ஆலயத்தில், புத்தாண்டு முன்னிட்டு விசேஷமான வழிபாடு நடைபெற்றது. நாடு நலம் பெறவும், மக்கள் வளம் பெறவும் வேண்டி, இந்த ஆண்டு காளி அம்மனுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பண மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, காளி அம்மனுக்குச் சாத்தப்பட்ட அந்தப் பணத்தை, கோவில் நிர்வாகம் அங்கிருந்த பொதுமக்களுக்கே திரும்ப வழங்கியது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது. மேலும், கோவிலுக்கு வந்திருந்த சுமார் 1000 பக்தர்களுக்கு அசைவ விருந்தாக சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. வழிபாட்டின் போது பல பக்தர்கள் அருள் வந்து ஆடினர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரபல அருள்வாக்கு அன்பரசு, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி எனப் பல அரசியல் தலைவர்கள் குறித்து நான் சொன்ன கணிப்புகள் சரியாகப் பலித்திருக்கின்றன. மக்கள் நலனுக்காக அம்மனுக்குப் பண மாலை சாத்துவது காளிக்கு மிகவும் பிடித்த விஷயம், அதையே இப்போதும் செய்திருக்கிறோம். அடுத்ததாக, 2026-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக யார் வருவார்? என்பது குறித்து வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி (02-02-2026) அன்று துல்லியமாக அருள்வாக்குச் சொல்வேன்" என்று தெரிவித்தார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: