Pasumai Kubbawin Naayagame | Yemakku Uthavidungal 🤲 | Thaiba Payanam Selvore | Madeena Shareef | MRE
Автор: Abdul Kader J
Загружено: 2024-02-24
Просмотров: 2340
பசுமை குப்பாவின் நாயகமே நாயகமே...
எனக்கு உதவிடுங்கள்
உதவிடுங்கள்.. உதவிடுங்கள்..
தங்களைத் தவிர
வேறு யார்தான்....
எனக்குத விடுவார்
சொல்வீர் நாயகமே...
தைபா பயணம் செல்வோறே
நின்றங்கே மிகவும் அதபுடன்
என்னிந்த சோகம் தீர்க்க
சொல்வீறே நபியின் மன்றில் (2)
** மா மன்னரிடத்தில் சொல்வீர்
நான் துன்பம் சூழ்ந்த அடியான்
இம்மை மறுமை யதிலும்
தாங்கள் தானே துணையாம்
பரிதாப நிலையில் என்றும்
உழலும் இந்த எளியான்
நடு நடுங்கிடும் நாவால்
நாட்ட மனைத்தும் நவில்ந்தேன்
பெரிதும் பாவம் செய்தேன்
அதையேற்று வெட்கி நின்றேன்
நாதியற்ற நிலையில்
யாருமின்றி தவித்தேன்
வழி மாறிசென்ற பயணி
திசை தேடி தவிக்கும் நிலைபோல்
காரிருளில் தவித்திடும் நான்
பேரொளியை தேடுகின்றேன்...
என் நெஞ்சம் இருளில் மூழ்கி
இதயம் பவத்தில் உறைந்த
உள்ளத்தின் உண்மை நிலையை
உரைப்பீரே உம்மி இடத்தில்....
நாதரின் இடத்தில் நவில்வீர்
மகிழ்ச்சி மறைந்த மனதில்
சோகத்தின் மேகம் சூழ்ந்து
கண்ணீரில் குளமாய் கண்கள்
மிகவும் நலிந்த வாழ்க்கை
ரஹ்மத்தின் உம்மத் நாங்கள்
உம்மத்தில் ரஹ்மத் தருள்வீர்
பாவியின் நிலையை பகர்ந்தேன்
தன் அலங்கோல நிலையை
புலம்பிக் கொண்டே இருக்கும்
என்னிந்த சோக நிலையை
சொல்வீறே நபியின் மன்றில்
தைபா பயணம் செல்வோறே
நின்றங்கே மிகவும் அதபுடன்
என்னிந்த சோகம் தீர்க்க
சொல்வீறே நபியின் மன்றில் (2)
மதினாவில் பணி செய்வோரே
மாநபியிடத்தில் நவில்வீர்
துன்பத்தில் துவல்வதனினால்
பற்றியே எரியும் நெஞ்சம்
ஏங்கிடும் இதய மதினால்
ஏகிடனும் இனிய மதீனா
இரு உலகின் மன்னரிடத்தே
கறையும் கல்பின் கறைகள்
இலட்சோப இலட்சியங்கள்
இதயத்தில் இறுகியதினால்
ஏக்கங்கள் எனும் வாட்கள்
நெஞ்சத்தில் பதித்த வடுக்கள்
பல்லாயிரம் முறைகள்
தய்பாவின் தெருவில் சுற்ற
பாவி பாக்கியம் பெறனும்
பதிவாழும் கால முழுதும்
மதீனம் மலர்ந்த மலரின்
மறையா மணமே மனதில்
முத்தம் நித்தம் தொடுத்து
மன்னில் என்தன் முகமன்
வாசலின் அடிமையாகி
பாதம் சிரத்தில் பதித்தே
நீதரில் ஒன்றி மகிழ
நிதமும் தவிக்கும் நினைவால்
ஆலத்தின் அடி மனதை
நெடுங் காலமாக வதைக்கும்
என்னிந்த சோக நிலையை
சொல்வீறே நபியின் மன்றில்
தைபா பயணம் செல்வோறே
நின்றங்கே மிகவும் அதபுடன்
என்னிந்த சோகம் தீர்க்க
சொல்வீறே நபியின் மன்றில் (2)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: