Solwom Madeena Madeena Selwom Madeena Madeena | Maadihur Rasool Ensemble
Автор: Abdul Kader J
Загружено: 2024-02-15
Просмотров: 1230
*சொல்வோம் மதீனா மதீனா மதீனா...
செல்வோம் மதீனா மதீனா மதீனா...*
1. நான் கலீமை கண்டதில்லை
அறியேன் அத்தூருஸீனா
எம் நாட்டம் என்றும் எம்மான்
எம் நோக்கம் மா மதீனா
சொல்வோம் மதீனா மதீனா மதீனா...
செல்வோம் மதீனா மதீனா மதீனா...
2. இதயம் நாடி துடிக்கும்
நெஞ்சம் ஏங்கி தவிக்கும்
இதை மாற்றும் மா மருந்து
எனை மதீனம் சேர்ப்ப தோன்றே
சொல்வேம் மதீனா மதீனா மதீனா
செல்வோம் மதீனா மதீனா மதீனா
3. பொருள் இல்லை என்றால் என்ன
நான் ஏழை என்ப தானே
என் காதலே நீயே சேர்ப்பாய்
கண்மணியின் மதீன பதியில்
சொல்வேம் மதீனா மதீனா மதீனா
செல்வோம் மதீனா மதீனா மதீனா
4. கதியேதும் காண வில்லை
நான் மூழ்கும் நிலையில் விழித்தேன்
உதவும் உம்நாமம் உரைத்தேன்
களம் கரையை கண்டததுவே
சொல்வேம் மதீனா மதீனா மதீனா
செல்வோம் மதீனா மதீனா மதீனா
5. மிஸ்க் அம்பர் பன்னீர் ரோஜா
அனைத்தின் மணத்தை மிஞ்சும்
இருலோகம் தனிலும் மிகைத்தே
மஹ்மூதர் வியர்வை மணக்கும்
சொல்வேம் மதீனா மதீனா மதீனா
செல்வோம் மதீனா மதீனா மதீனா
6. ஸலவாத்தை அதிகம் மொழிவோம்
எவ் வேண்டல் தனையும் மிகைக்கும்
அதிகம் ஸலாமும் உரைப்போம்
அழகாம் மதீனம் சேர்க்கும்
சொல்வேம் மதீனா மதீனா மதீனா
செல்வோம் மதீனா மதீனா மதீனா
7. எம் குருவே தர்பா பாவா
காட்டிடுங்கள் எமக்கு கஃபா
கஃபாவை கண்ட பிறகு
சேர்த்திடுங்கள் மா மதீனா
சொல்வேம் மதீனா மதீனா மதீனா
செல்வோம் மதீனா மதீனா மதீனா
8. இப்பாடல் பாடும் இக்பால் / இவனின்
இதயத்தின் இறைஞ்சல் இதுவே
நிம்மதியின் வாழ்வு பெற்றே
அழைத்துச் செல்வீர் மதீனா
சொல்வேம் மதீனா மதீனா மதீனா
செல்வோம் மதீனா மதீனா மதீனா
Lyrics By
Abdur Raheem Qadiri
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: