Sirkazhi – Sattanathar – Kala Bairavar - Aabadhuththaaranar Malai - Part 1
Автор: S. Alagappan (Alagappan)
Загружено: 2017-02-19
Просмотров: 13616
தருமையாதீனம் 10வது குருமூர்த்திகள் ஸ்ரீ-லஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள். இவர் சீர்காழி சட்டநாதர் மேல் பாடி அருளியதுதான் ''ஆபதுத்தாரணர் மாலை''....
காப்பு
விண்ணார் மலர்ப்பொழில் சூழ்காழி மாமலை மேலமர்ந்த
தண்ணார் மதிபுனை வேணியன் ஆபதுத்தாரணன் மேல்
பண்ணாப் பாடிய மாலைக்கு மாமுகன் பாதமும் நீள்
கண்ணாறிரண்டுள கந்தன் பொற்பாதமும் காத்திடுமே. 00
சீர்கொண்ட செம்பொன் திருமேனியுஞ்செம் முகமலரும்
கார்கொண்ட சட்டையும் தண்டாயுதமும் கணங்கள் எட்டும்
கூர்கொண்ட மூவிலைச் சூலமும் கொண்டருள் கூர்ந்த கொன்றைத்
தார் கொண்ட வேணியனே காழியாபதுத்தாரணனே. 01
தெள்ளும் புழுகும் பனிநீரும் குங்குமச்சேறும் செந்தேன்
விள்ளும் மலரும் நின் பாதத்தில் சாத்தி விடாமலின்பங்
கொள்ளும்படியன்பு தந்தெனை யாண்டருள் கூற்றுவனைத்
தள்ளும் பதாம்புயனே காழியாபதுத்தாரணனே. 02
சாயாத சூலதண்டாயுதனே பச்சைச் சட்டையனே
வேயார் விண்ணோர் தொழ மெனியனேயென்மிடி தவிர்ப்பாய்
வாயார வுன்னைத் துதிப்போர்க்கு வேண்டும் வரமளிப்பாய்
தாயாகிய அப்பனே காழியாபதுத்தாரணனே. 03
வட்டையொப்பாகும் இனியசொல்மாதர் மயக்கத்திலே
பட்டையப் பாமிகயானிளைத்தேன் பண்டிருவர்க்கெட்ட
நெட்டையப்பாமறை காணத சேவடி நீயருள்வாய்
சட்டையப்பா வடுகா காழியாபதுத்தாரணனே. 04
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: