Sathaai Niskalamaai || Tamil Christian Keerthanai || H.A. Krishnapillai || Sastriar Mrs.Sarah Martin
Автор: The Martins
Загружено: 2021-09-12
Просмотров: 46175
Song : Sathaai Niskalamaai
Lyric : H.A. Krishnapillai
Introduction : Prof.Martin Devaprasath
Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
Music : A. Christiyaan Kutti
Album : Kirubayin Keerthanaigal
Editing : D.Karthikeyan
Produced by : The Matins
Copyrights : D.K.Enterprises
பாடல் வரிகள்
1 . சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து
அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
2 . திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்
பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்
அரசே உன்னை அல்லால் எனக்கார்துணை யாருறவே
3. பித்தேறிச் சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவதே
செத்தேன் உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மம தாய்
எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று
அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
4. துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள
இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்
அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
பாடலின் பொருள்
1.உண்மை, அறிவு, பேரின்பம் என்னும் பண்புகளின் இருப்பிடமாய் எங்கும் நீங்காமல் நிறைந்திருப்பவரும். எவரோடும் ஒப்பிட முடியாதவருமாகிய மூவொரு இறைவனாம் தந்தையே, உம்மையன்றி வேறு ஒருவராலும் என் பாவம் மன்னிக்கப்பட முடியாதே.
2. வேதனைகள் நிறைந்த பாவக்கடலில் மூழ்கிய பாவிகளாம் மனுமக்களைத் தூக்கியெடுத்து வாழ்வளித்தீர். ஆனாலும், குருட்டாட்டம்பிடித்த மனிதனாகிய நான், உம்மைப் பற்றிக்கொள்ளவுமில்லை, துதித்து உமக்கு நன்றி செலுத்தவுமில்லை. என்றாலும், தேவரீர் அடியேனைக் கைவிடாது காத்தருளவேண்டும். உம்மையல்லாமல் எனக்கு எவ்வித உறவும்,உதவியும் இல்லையே.
3. உலக ஆசையாம் தீய சக்தியால் இழுக்கப்பட்டு, பிறக்கும் போதே ஆன்மாவில் செத்தவனாகக் காணப்பட்ட நான், உம் கிருபையால் மறுபிறப்பின் அனுபவத்துக்குள்ளாகிப் பிழைத்தேன். பாவ சாபங்கள் அனைத்தையும் மன்னித்து என்றும் எனக்கு நீர் இரங்கவேண்டும். உம்மையல்லாது எனக்கு துணையாளரும், உறவினரும் வேறு எவரும் இல்லையே.
4. பரிசுத்த சிந்தையற்று இரகசியமாக செய்த பாவத்திற்கான தண்டனை இவ்வுலக பெறாமல் மக்கள் நியாயத்தீர்ப்பு நாளில் என்னையும் அனைவரும் வாழ்வுபெற மனிதனாக உருவெடுத்த எங்கள் தந்தையே, உம்மையன்றி எனக்கு எந்தத் துணையும், எவரது உறவும் இல்லையே.
This song is also available on
https://wynk.in/music/album/kirubayin...
https://www.amazon.com/Thiriyaega-Thi...
https://us.napster.com/artist/sastria...
https://www.shazam.com/track/43876881...
https://open.spotify.com/album/2CM6l1...
/ kirubayin-keerthanaigal
https://www.kkbox.com/sg/sc/song/xXX0...
https://www.deezer.com/en/album/72564752
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: