மரத்தில் ஒரு பாலம் | Marathil Oru Paalam | Classic Melody | Tamil Song | Govind Swaminathan |
Автор: Govind Swaminathan
Загружено: 2026-01-06
Просмотров: 398
பாடல் - மரத்தில் ஒரு பாலம்
பாடலாசிரியர் - கோவிந்த் சுவாமிநாதன்
இசை - Suno
Image generated in Gemini
பாடல்
கவிதையில் எழுதிய ஒரு வரி
சென்றிடும் காற்றில் உன் வழி
G P S உதவி இல்லாமல்
சேர்ந்திடும் உன்னை
எண்ணம் எழுப்பும் ஒரு அலை
சென்றிடும் சுற்றி மின்னலாய்
இறங்கிடும் பூப்போல் அது மெல்ல
உன்மேல் ஒரு நொடியில்
யாரும் அறியாத பாதை ஒன்று
அமைக்கும் காதல் மலர்கள் கொண்டு
அழகிய சாலை விளக்கு ஒளி தர
இருவர் நடப்போம் அதில்
கவிதையில் எழுதிய ஒரு வரி
சென்றிடும் காற்றில் உன் வழி
G P S உதவி இல்லாமல்
சேர்ந்திடும் உன்னை
புது மொழி நீ சொல்ல
பொருள் ஒன்றை நான் சேர்க்க
யாரோ அமைத்த ஓவியத்தில்
நாம் ரசித்து உரையாட
மரத்தில் அமைந்த ஒரு பாலம்
செல்வோம் நாம் அதில் என்றும்
உலகில் தொடங்கி கனவு வரை
நடப்போம் தினம் அதில்
அன்பென்னும் நாரை எடுத்து
நட்பு என்ற மலர்கள் கோர்த்து
தேனை சொல்வழி அதில் சேர்த்து
அணிவோம் அதை காதலாய்
எண்ணம் எழுப்பும் ஒரு அலை
சென்றிடும் சுற்றி மின்னலாய்
இறங்கிடும் பூப்போல் அது மெல்ல
உன்மேல் ஒரு நொடியில்
Iron Dome இல்லை நம் மேல்
இல்லை பகை நம்மை தாக்க
பலர் மனம் சொல்லும் வாழ்த்துக்கள்
உண்டு என்றும் நமக்கு
போர் நிகழும் உலகமெங்கும்
வர்த்தகம் தினமும் தடுமாறும்
மாறும் எல்லாம் நம்மை சுற்றி
காதலை மறந்த உலகம்
அன்பென்னும் நாரை எடுத்து
நட்பு என்ற மலர்கள் கோர்த்து
தேனை சொல்வழி அதில் சேர்த்து
அணிவோம் அதை காதலாய்
எண்ணம் எழுப்பும் ஒரு அலை
சென்றிடும் சுற்றி மின்னலாய்
இறங்கிடும் பூப்போல் அது மெல்ல
உன்மேல் ஒரு நொடியில்
யாரும் அறியாத பாதை ஒன்று
அமைக்கும் காதல் மலர்கள் கொண்டு
அழகிய சாலை விளக்கு ஒளி தர
இருவர் நடப்போம் அதில்
கவிதையில் எழுதிய ஒரு வரி
சென்றிடும் காற்றில் உன் வழி
G P S உதவி இல்லாமல்
சேர்ந்திடும் உன்னை
#tamilmusic #tamilmelody #tamilcalypsosongs #coversong #tamillovesongs #tamilpopsongs #lovesongs #musicsong #malayalamsongs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: