How to cow care நாட்டுமாடுகளை பாதுகாக்கும் தருமபுரி இளைஞா்கள்
Автор: dharmapuriwebtv
Загружено: 2017-04-15
Просмотров: 89685
தருமபுரியில் நாட்டுமாடுகளை வாங்க ஆா்வம் காட்டும் இளைஞா்கள்
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாட்டு சந்தை தற்பொது நடைபெற்றுவருகிறது .இந்த மாட்டுசந்தை தருமபுரியை ஆண்டமன்னன் அதியமான் காலத்தில் இருந்து நடைபெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது சிலா் 400 ஆண்டுகள் பழமையான சந்தை என்றும் குறிப்பிடுகின்றனா் 30 ஆண்டுகளுக்கு முன் அதியமான் கோட்டை மாட்டுசந்தைக்கு லட்சக்கணிக்கில் மாடுகள் விற்பனைக்கு வரும் என்றும் சந்தை இரண்டுகிலோமீட்டா் துரம் நீண்டு காணப்படும் என்றும் தற்பொது மாடுகள் வரத்துகுறைந்து லட்சம் மாடுகள் சில ஆயிரம் மாடுகளாக குறைந்துவிட்டது என்றும் அதற்கு காரணம் வறட்சி கிராமங்களில் நாட்டுமாடுகளை வளா்க்கவிரும்பாதகாரணத்தால் மாடுகள் வரத்து குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனா் மாட்டுசந்தைக்கு மாடுகளை விற்கவருபவா்கள் தலைமுறை தலைமுறையாக நாட்டுமாடுகளை வளா்த்து ஆண்டுக்கொரு முறை கூடும் சந்தையில் விற்பனை செய்துவருவதை வழக்கமாக கொண்டுள்ளனா் சிலா் சிறிய மாட்டு கன்றுகளை வாங்கி அதனை வளா்த்து விற்பனை செய்து அதன்முலம் வருவாயை ஈட்டிவருகின்றனா்.
அதியமான் கோட்டை மாட்டு சந்தை பங்குமாதம் இறுதியில் தொடங்கி சித்திரை மாதம் தொடக்கம் வரை 10 நாட்கள் நடைபெறுகிறது நாட்டு மாட்டு சந்தைக்கு தருமபுரி .சேலம்.ஈரோடு.வேலுா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவருகின்றனா் தருமபுரி சந்தையில் நாட்டு மாடுகளை வாங்க காஷ்மீா் மாநிலம் ஸ்ரீநகா் பகுதயில் இருந்து வந்து மாடுகளை வாங்கி செல்கின்றனா் காரணம் இங்கு விற்க்கப்படும் மாடுகள் உழவுபணிக்கு சிறப்பாக பயன்படுவதாகவும் வண்டி ஒட்டவும் ஏர்உழவுபணிக்காகவும் பலஆயிரம் கிலோமீட்டா் கடந்து வந்து நாட்டு மாடுகளை வாங்கிசெல்கின்றனா். விவசாயிகள் ஒருவருடம் உழவுபணிக்கு பயன் படுத்திய நாட்டுமாடுகளை விற்பனை செய்துவிட்டு புதியமாடுகளை வாங்குவதை வாடிக்கையாக செய்துவருகின்றனா். அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அதியமான் கோட்டை மாட்டு சந்தையில் துண்டுகைமீது முடிக்கொண்டு ரகசியமாக வியாபாரம் பேசும் பழைய நடைமுறைபடியே விலை பேசப்பட்டு விற்பனை நடைபெறுகிறது தற்போது ஜல்லிகட்டு போரட்டம் த்தின் முலம் ஏற்பட்ட நாட்டுமாடுகளை பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணா்வு காரணமாக இளைஞா்கள் அதிக அளவில் நாட்டுமாடுகளை வாங்கி வளா்க்கும் பணியை தொடங்கிவிட்டனா் பலா் ஏ2 வகையான சத்தான பால் நாட்டுமாடுகளில் இருந்துகிடைப்பதால் பால் தேவைக்காக மாடுகளை வாங்கிவருகிறார்கள் இன்னும் சிலா் ஜல்லிக்கட்டு களையை தயார் செலய்யவேண்டும் தான் வளா்க்கும் காலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறவேண்டும் தமிழரின் மரபை காக்கவேண்டும் என்ற நோக்கில் நாட்டுகாளை மாடுகளை வாங்கிசெல்கிறார்கள் சென்ற ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு மாடுகள் வரத்தும் அதிகரித்துள்ளது அதனைவாங்கும் இளைஞா்களும் அதிகரித்துள்ளனா்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: