ஆண்டாள் திருப்பாவை இருபத்தி இரண்டாம் பாசுரம் மற்றும் விளக்கம் -
Автор: ஆன்மீக விஞ்ஞானி
Загружено: 2024-01-06
Просмотров: 69
ஆண்டாள் திருப்பாவை இருபத்தி இரண்டாம் பாசுரம் மற்றும் விளக்கம் - #hindu #ஆண்டாள் #திருப்பாவை #மார்கழி
@aanmeegawingnani #படித்ததில்பிடித்தது #hindu #ஆன்மீகம் #tamil #hinduism
#இருபத்தி இரண்டாம் பாசுரம்
#அங்கண்மா ஞாலத்து
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல் நோக்குதுயேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் .
உய்யும் வழியொன்றும் காணாமல் உன் கழல்களே
சரணம் சரணம் என்று உன்னிடம் புகலடைந்தோம் என்று
முன்னைய பாசுரத்தில் திருவாய்ப்பாடிப் பெண்கள்
கண்ணனைச் சரணடைந்த திறத்தினைக் கண்டோம் .
இத்திருப்பாசுரத்தில் கண்ணனுடைய கணக்கிலாத
ஆற்றவினையும் அரும்பண்புகளையும் தொகுத்துக்
கூறுகிறார்கள் அவர்கள் . இடமகன்ற இப்பெரிய உலகமே
நம்முடையது என்று தருக்கில் இரிந்த அரசர்கள் அந்தத்
தருக்கு நீங்கப் பெற்றவர்களாய் உன் பள்ளியறையில் நீ
படுத்துக் கொண்டிருக்கும் கட்டிலுக்கு அருகில் கூட்டமாகக்
கூடியிருப்பதுபோல் , நாங்களும் உன் திருக்கல்யாண
குணங்களில் ஈடுபட்டு, தோய்ந்து, எங்கள் சொந்த அபிமானம்
நீங்கப் பெற்றவர்களாய் உன்னிடம் வந்து சேர்ந்தோம்
என்கிறார்கள் .
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் .
இவ்வாறு தங்கள் செருக்கு நீங்கியவர்கள் இறைவன் உலகை
எட்டுவார்கள் என்னும் பொருள்படத் திருவள்ளுவர்
பெருமான் ,
“யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் '.
என்று குறிப்பிட்டுள்ளார் .
கிண்கிணியின் வாய்போல் சிறிதே மலர்ந்திருக்கும் - தாமரைப் பூப்போல விளங்குகின்ற உன்னுடைய திருமுகத்திலே இருந்து அருள் பாலிக்கும் உன்னுடைய செக்கச் சிவந்த கண்கள் ஒரு சிறிதேனும் எங்கள் மேலே விழியாவோ, அவ்வாறு விழித்தால் அது ஆகாதோ? என்று கண்ணனுடைய கருணைக் கண்கள் தங்கள் மேல் பதிய வேண்டும் என்று இரங்கி ஏங்கிக் கேட்டுக் கொள்கிறார்கள் .
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ.
இவ்வாறு இரந்து கேட்டும் , கண்ணன் கிஞ்சித்தும் கருணை
காட்டவில்லை. சந்திரனும் , சூரியனும் ஒருசேர உதித்தது
போல உன்னுடைய அழகைக் கண்டு திளைக்கும் எங்களை
நோக்கிக் கண்கள் இரண்டனையும் கொண்டு கருணை
காட்டுவாயாகில் எங்களை நீ கண்ணெடுத்தும் பார்க்க
வில்லை என்ற சாபம் தொலைந்து, நாங்கள் உய்வோம்
என்று திருவாய்ப்பாடிப் பெண்கள் முத்தாய்ப்பாகப்
பேசுகிறார்கள் .
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் .
இங்குத் “திங்களும் ஆதித்தியனும் ' என்று ஒரேயடியில்
முரண்பட்ட இருபொருள்கள் இடம் பெற்றிருப்பது
முரண்தொடை நயமாகும் .
சந்திரனும் சூரியனும் கண்ணனின் இரு கண்களாக
இங்கே காட்டப்படுகின்றன. அவன் கண்களில் வெப்பமும்
உண்டு; தட்பமும் உண்டு என்பதனை இது புலப்படுத்தும் .
மாற்றார் . அவன் கண் வெப்பத்தால் தொலைகிறார்கள் .
அவனது அடியார் அவன் தட்பத்தால் குளிர்ந்து
மகிழ்கிறார்கள் .
இவ்வாறு இத்திருபாசுரத்தில் கண்ணன்
மாட்டுக் காதல் மீதூரப் பெற்ற. திருவாய்ப்பாடிப் பெண்கள் ,
அவனை வாழ்த்துவதே தங்களுடைய வாழ்வாக அமைகிறது
என்பதனைப் புலப்படுத்தியிருக்கக் காணலாம் .
நன்றி நவிழ்கின்றோம்..
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் ,
எம் .ஏ., எம் .லிட் ., பி.எச் .டி.
சிறப்பு நிலைப் பேராசிரியர் ,
தமிழ் மொழித்துறை,
சென்னைப் பல்கலைக் கழகம் ,
சென்னை - 600 005.
PLEASE WATCH
• இந்து மதத்தின் மறைக்கபட்ட இரகசியங்கள் - த...
• கழுகுகள் நமக்கு கற்று தரும் பாடம்---#தெய்வ...
• இந்து மதத்தின் மறைக்கபட்ட இரகசியங்கள் - த...
• பிறவிகளின் வழியே விதி - ஆன்மீக சிறுகதை @aa...
• கந்த சஷ்டி விழா தோன்றிய கதை #கந்தசஷ்டிவிரத...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: