ஜனவரி - 22 அனுதினமும் தேவனோடு : சிறுபூச்சிக்குத் துணை *" பயப்படாதே; நான் உனக்கு துணைநிற்கிறேன்."
Автор: BPT Church, Malavilai - OFFICIAL
Загружено: 2026-01-21
Просмотров: 66
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!
ஜனவரி - 22
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
அனுதினமும் தேவனோடு :
இன்றைய தலைப்பு : சிறுபூச்சிக்குத் துணை
"யாக்கோபு என்னும் பூச்சியே;... பயப்படாதே; நான் உனக்கு துணைநிற்கிறேன்." (ஏசாயா 41:14)
பயத்தை முறியடித்து, முதல் அடியை எடுத்து வை:
கர்த்தருக்குள் மிகவும் பிரியமானவர்களே, இன்றையதினம் நம்
ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டக்கூடியதாக இந்த வேதபகுதி அமைந்துள்ளது. மனித வாழ்வில் பயம் என்பது நம்மை பின்தொடர்கின்ற ஒன்று. பயத்தால் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்க தயங்குகிறீர்களா? ஆயிரம் மைல்களைக் கடக்க வேண்டுமானாலும் முதல் அடியை நாம்தான் எடுத்து வைக்க வேண்டும். பயத்தை முறியடித்து காரியத்தை நடப்பி. நான் உனக்கு துணைசெய்கிறேன் என்று கர்த்தர் வாக்குறுதி அளிக்கிறார். வாழ்க்கையில் பயமுறுத்தும் தருணங்கள் வரலாம். திடுக்கிடும் சம்பவங்கள் நேரலாம். வாழ்க்கை படகானது ஆழ்கடலில் சிக்கி தவிக்கலாம். இவை எல்லாவற்றிலும் கர்த்தருடைய புயம் நம்மோடிருந்தால் நமக்கு வெற்றி நிச்சயம். வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முடிவுகளை கர்த்தர் துணையோடு செயல்படுத்திடுங்கள். துவக்கம் அற்பமானாலும் முடிவு சம்பூரணமாகிடும்.
துணைசெய்யும் கர்த்தரால் நிச்சயமான வெற்றி:
ராட்சதனான கோலியாத்துக்கு அஞ்சி போர்க்களமே பயந்தோடியபோது கர்த்தரை துணையாக கொண்டிருந்த தாவீதோ பாய்ந்தோடினான். சிறு கல்லால் சீறிப் பாய்ந்த கோலியாத்தை தாவீது வீழ்த்தினான். அதேபோல, கடலில் அமிழ்ந்து போகிறேன் ஆண்டவரே என்று பேதுரு கதற, இயேசு, நான் உன்னோடிருக்க ஏன் பயப்படுகிறாய் என்று கடிந்துகொண்டு கரம் பிடித்து தூக்கி எடுத்தார். பேதுரு பயத்தை மேற்கொண்டு கிறிஸ்துவில் பலவானாக திகழ்ந்தார்.
கிறிஸ்தவ வாழ்க்கையில் காரிருள் போன்ற சோதனைகள் நம்மை சூழ்ந்தாலும் நாம் பயப்பட வேண்டாம். ஒளியாம் கிறிஸ்து நம்மோடிருக்க நம்முடைய வாழ்க்கையும் பிரகாசித்திடும். இன்றைக்கு நாம் பயங்கர காட்டில் நடந்தாலும் நாளைக்கு வாக்குத்தத்தத்தின் நாட்டில் நடப்போம்! எல்லாம் வல்ல கர்த்தர் தாமே பயம் என்னும் கோர புயலை மாற்றி இதமான தென்றலாக நம் வாழ்வில் வந்திடுவாராக! பயத்தை விடுங்கள், நம்பிக்கையை கையிலெடுங்கள்! சாத்தானை துரத்திடுங்கள் வாழ்க்கையில் முன்னேறிடுங்கள்!ஆமென்.
************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: