ஜனவரி - 21 : அனுதினமும் தேவனோடு : ஒப்பானவர் யார்!
Автор: BPT Church, Malavilai - OFFICIAL
Загружено: 2026-01-20
Просмотров: 82
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!
ஜனவரி - 21
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
அனுதினமும் தேவனோடு :
இன்றைய தலைப்பு: ஒப்பானவர் யார்!
"கர்த்தாவே உமக்கு ஒப்பானவர் இல்லை நீரே பெரியவர் உமது நாமமே வல்லமையில் பெரியது" (எரேமியா 10:6)
சர்வ சிருஷ்டிகர்
நம்முடைய கர்த்தராகிய தேவனின் வல்லமையை எரேமியா தீர்க்கதரிசி இந்த வசனத்தின் மூலம் எடுத்துரைக்கிறார். அவருக்கு ஒப்பானவர் இந்த உலகத்தில் எவருமே இல்லை. அவர் எல்ஷடாய் என்னும் நாமம் கொண்ட சர்வ வல்லமையுள்ள தேவன். அவருடைய நாமம் எல்லா நாமத்திற்கும் மேலாக வல்லமை கொண்டது. அந்த வல்லமை வியாதிகளை நீக்கும்,விடுதலைகளை அருளும் ஆற்றலைக் கொண்டுள்ளது.அவரது நாமத்தில் அவ்வளவு அதிசயமும் ஆச்சரியமும் ஒளிந்திருக்கிறது.
அவரே சர்வ சிருஷ்டிகர். அவருடைய படைப்புகளின் ஆழத்தையும் அதிசயத்தையும் பகுத்தறிய ஞானிகளாலும் கூடாமற்போகிறது. அவர் மரித்த லாசருவுக்கு ஜீவனைக் கொடுத்தார். சோதிக்க வந்த சாத்தானை வார்த்தையாலே விரட்டி அடித்தார். பதினெட்டு வருஷமாய் நிமிரக்கூடாத கூனியை நிமிர செய்தார். கடலுக்கு எல்லையை குறித்தவர் யார்? அதற்கு மேகத்தை வஸ்திரமாகவும், இருளை புடவையாகவும் உடுத்தினவர் யார்? நாம் அவரை யாருக்கு ஒப்பிடுவோம்?
ஞானவானின் தெரிவு:
தொழில்நுட்பத்திலும், கண்டுபிடிப்புகளிலும், செயற்கை நுண்ணறிவிலும் முதிர்ச்சி பெற்ற காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், இத்தகைய முதிர்ச்சி பெற்ற நம்மைப் போன்ற ஒருவரால் மரித்த ஒரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிக்க கூடுமோ? நோய் வியாதிகளிருந்து வார்த்தையினாலே விடுதலையளிக்க மனுஷனால் கூடுமோ? ஆனால் தேவன் தன்னுடைய வார்த்தையினால் அநேகரை குணமாக்கினார் அல்லவா? அவரது ஓங்கிய புயத்தால் அகில உலகத்தையும் ஆட்சி செய்கிறார்.
அவர் ஒரு வார்த்தை சொன்னால் நம்முடைய வாழ்வு வளம்பெறும். இயேசு நம்மோடிருந்தால் அற்புதங்கள் அதிசயங்கள் நம் வாழ்விலும் நடந்திடும். புத்திசாலி நிலவில் நடக்கலாம். தைரியசாலி ஆழ்கடலில் நடக்கலாம். ஆனால் உண்மையான ஞானவானோ இயேசுவோடு நடக்கிறான். எவருக்கும் ஒப்பில்லாத தேவனோடு ஒப்புரவாகுவோம்! நிகரில்லாத நித்திய பிதாவோடு நித்திய காலம் வாழ்வோம்! ஆமென்
*****
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: