திருவாசகம் - திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே - மாணிக்கவாசக சுவாமிகள்
Автор: Thiruneriya Thamizhosai
Загружено: 2025-08-20
Просмотров: 892
08.019 திருவாசகம் | திருத்தசாங்கம் | ஏரார் இளங்கிளியே | மாணிக்கவாசக சுவாமிகள்
#Thiruvasagam | #Manikkavasagar | #PanniruThirumurai
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஆனந்த நடராஜர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமசுந்தரி
திருமுறை : எட்டாம் திருமுறை 019 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : மாணிக்கவாசக சுவாமிகள்
பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்
இது தில்லையில் அருளிச்செய்தது. அரசனுக்குரிய பத்து உறுப்புகளும் இறைவனிடத்தில் காணப்படும் முறை கூறப்பட்டுள்ளது. தசாங்கங்கள் கீர்த்தித் திருவகவலில் கூறப்பட்டன. இவையனைத்தும் தலைவி கிளியைப் பார்த்துக் கூறப்பட்டனவாகவே சொல்லப்பட்டுள்ளன. இறைவனது தசாங்கங்களையும் தலைவி கிளியின் வாயால் கேட்டு இன்புறுகின்றாள்.
00:10 ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்து உரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர் பிரான் என்று. ..... (01)
00:58 ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் - காதலர்க்கு
அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும்
தென்பாண்டி நாடே தெளி. ..... (02)
02:04 தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தான் வாழ்பதி என் - கோதாட்டிப்
பத்தர் எல்லாம் பார்மேல் சிவபுரம்போல் கொண்டாடும்
உத்தரகோச மங்கை ஊர். ..... (03)
03:26 செய்யவாய்ப் பைஞ்சிறகின் செல்வீ நம் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் - தையலாய்
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும்
ஆனந்தம் காண் உடையான் ஆறு. ..... (04)
04:36 கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலை பகராய் - நெஞ்சத்து
இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி
அருளும் மலை என்பது காண் ஆய்ந்து. ..... (05)
06:04 இப்பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே
ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே - எப்போதும்
தேன் புரையும் சிந்தையராய்த் தெய்வப்பெண் ஏத்து இசைப்ப
வான் புரவி ஊரும் மகிழ்ந்து. ..... (06)
07:19 கோல் தேன் மொழிக் கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படை பகராய் - ஏற்றார்
அழுக்கு அடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயும்
கழுக்கடை காண் கைக்கொள் படை. ..... (07)
08:17 இன்பால் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் - அன்பால்
பிறவிப் பகை கலங்க பேரின்பத்து ஓங்கும்
பருமிக்க நாதப் பறை. ..... (08)
09:12 ஆய மொழிக் கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தார் என் - தீயவினை
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளி அறுகாம் உவந்த தார். ..... (09)
10:14 சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியும் கொடி கூறாய் - சாலவும்
ஏதிலார் துண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும்
கோதிலா ஏறாம் கொடி. ..... (10)
பொருளுரை : சோலையில் வாழ்கின்ற பச்சைக் கிளியே! தூய்மையான நீர் சூழ்ந்த திருப்பெருந்துறை மன்னனது கொடியாவது, பகைவர் மிகவும் திடுக்கிட்டு அஞ்சும்படி மேலே விளங்கி, அழகைக் காட்டுகின்ற குற்றமில்லாத இடபமேயாகும். அழகு விளங்கும் அக்கொடியினைக் கூறுவாயாக.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: