கவசங்களுக்கெல்லாம் முன்னோடியான "ஸ்ரீ ராகவேந்திர கவசம்"
Автор: Amman Sathiyanathan H
Загружено: 2023-04-20
Просмотров: 57758
கவசங்களுக்கெல்லாம் முன்னோடியான "ஸ்ரீ ராகவேந்திர கவசம்"
ஆம்! நாமெல்லாம் நன்கறிந்த கந்தர் சஷ்டி கவசத்தை அருளிய ஸ்ரீ பாலன் தேவராய ஸ்வாமிகள் அவதரித்த ஆண்டு கி.பி.1857. சமஸ்கிருதத்தில் ஸ்ரீ ராகவேந்த்ர கவசத்தை அருளிய ஸ்ரீமத் அப்பண்ணாசார்யர் அவதரித்த ஆண்டு கி.பி 1593.
அப்பண்ணாசார்யர், ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்ரத்தை ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவனோடு பிருந்தாவன ப்ரவேசம் செய்த கி.பி.1671 இல் அருளினார். பின்னர் அதைத் தொடர்ந்து அவர் அருளியதே ஸ்ரீ ராகவேந்த்ர கவசம், நாமாவளி, மங்களாஷ்டகம் போன்றவை.
இவை அனைத்தையும் திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.
ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்ரம் "ஸகல ப்ரதாதா" எனும் பெயரில் தமிழில் இசை வடிவில் வெளிவந்துள்ளது போல இதோ கவசமும் திரு.நாஞ்சில் தென்கரை மகராஜன் அவர்களின் இசையில் குரலில் வெளியாகியுள்ளது.
கேளுங்கள்! ஸ்ரீ குருராஜரின் அருளுக்குப் பாத்திரராகுங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: