அவங்க யாரு? இந்த பழங்கால சிற்பங்கள புரிஞ்சிக்கறது எப்படி?
Автор: Praveen Mohan Tamil
Загружено: 2025-02-27
Просмотров: 37026
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Whatsapp......https://whatsapp.com/channel/0029Va9U...
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
Hey guys, இன்னிக்கு நாம இந்தியா ல திருக்குறுங்குடியில இருக்கிற ஒரு பழமையான கோவிலுக்கு போறோம், இந்தப் பகுதிக்குள்ள நுழையும்போது, இந்த 8 பேர் சுத்தி நின்னு பேசிட்டு இருக்குறத பார்க்கலாம். அவங்க மனிஷங்க இல்ல, அவங்க பிரமாண்டமான சிலைகள். இவங்க எல்லாம் யாரு, ஏன் இங்க கூடி நின்னுகிட்டு இருக்காங்க? ஆர்க்கியாலஜிஸ்ட்களும் வரலாற்றாசிரியர்களும் பொதுவா இவங்கள முக்கியமில்லாத இந்து போர்வீரர்கள் இல்லன்னா அழகுக்காக வைக்கப்பட்ட கடவுள்கள் ன்னு ஒதுக்கி தள்ளிடுவாங்க , ஆனா, ஒவ்வொரு சிலையயும் ஒரு காரணத்துக்காக தான் வச்சிருக்காங்கன்னு நான் அடிச்சு சொல்லுவேன். அதனால, அவங்க யாரு, ஏன் இங்க அவங்கள வச்சிருக்காங்கங்கறத டி கோடு பண்ண முயற்சிக்கலாம் வாங்க. முதல்ல இந்த வீரனப் பார்ப்போம், வில்லைப் பிடிச்சுக்கிட்டிருக்கற இவர் யாரு? ஆனா இந்த பிரம்மாண்டமான சிற்பம் நம்மள முட்டாளாக்குது.
பாருங்க, அவரு, ஒரு வில்லப் புடிச்சுகிட்டு இருக்கிறதா நீங்க நினைக்கிறீங்க. ஆனா உண்மையில அப்படியா? இல்ல. மேல பாருங்க. வில்லுல இருந்து இலைகள் வெளியில வருது. இந்த வரிகள நீங்க இங்க பார்க்கலாம், இதெல்லாம் கரும்புத் தண்டோட முனைகள். ஆமா, அவர் கையில இருக்கறது வில் இல்ல. அது ஒரு கரும்பு. சரி, இந்து மதத்துல கரும்பு வில்ல யாரு வச்சிருப்பாங்க? காதலோட கடவுள் காமதேவன். அவரு இன்னொரு கையில என்ன வச்சிருக்காரு? ஒரு அம்பா? இல்ல, ஒரு பூ மொட்டு. அவரு மனுஷங்க மேல பூக்கள அம்பா எய்யறாரு, அவங்க காதல்ல விழறாங்க.
அவர் ரோமானியக் கடவுள் குபிட் க்கு சமமான இந்திய கடவுள் மன்மதன். சரி, முதல் சிலைய வெற்றிகரமா டிகோட் பண்ணியாச்சு, இப்போ அவருக்கு நேர் எதிர என்ன செதுக்கி இருக்காங்கன்னு பாப்போம். இந்த அழகான பொண்ணு, ஒரு பறவை மேல உட்கார்ந்துகிட்டு இருக்காங்க. அந்தப் பறவைக்கு அந்தப் பொண்ண தாங்குற அளவுக்கு ரொம்ப தடிமனான கால்கள் இருக்கு, அதுல விரல்கள் ஒண்ணா சேர்ந்து பின்னப்பட்ட பாதங்களும் இருக்கு. அந்தப் பறவையச் சுத்தி போற கயித்தயும், சேணத்தையும் பாருங்க. கயித்துக்கும் பறவைக்கும் இடையில இருக்கிற இடைவெளியப் பாருங்க, கயித்துல இருக்கிற முறுக்குகள கவனிங்க.
#praveenmohantamil #hinduism #ancientcarving #india
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: