தாலி ஏறுமோ? தாரம் ஆவேனோ? பார்ட் 1/2 | NiviAmmu novel | tamil audio novel |
Автор: nivi ammu novels
Загружено: 2026-01-18
Просмотров: 23096
தாலி ஏறுமோ?? தாரம் ஆவேனோ??
தாலி - 1
“இன்னுமா என் குழந்தையை குளிப்பாட்டிட்டு இருக்க? சோம்பேறி, சோம்பேறி. கொஞ்சமாவது சுறுசுறுப்பா இருக்கியா? உன்னை எல்லாம் வச்சிகிட்டு என்ன பண்ண முடியும்? உதவாகாரி” என கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள் கயல்விழி.
“இந்த சனியனை ஒழிச்சு கட்டணும். எந்த வேலையும் செய்யாமல் இவளும் இவள் கூட ஒன்னும் இந்த வீட்டில் தெண்ட சோறு திங்கிது. எல்லாம் எங்க தலை எழுத்து. நானும், என் புருஷனும் சம்பாதிச்சு இதுக்கும் சோறு போடணும்னு.” என அவள் முன்பே அவளை திட்டிக் கொண்டிருந்தாள்.
“முடிஞ்சுது…” ஒன்றும் நடக்காதது போல குழந்தைகளை குளியலறையில் இருந்து வெளியே அழைத்து வந்து நிறுத்தியவள் தன் புடவை முந்தானையை உதறி முகத்தில் இருந்த வியர்வைகளை துடைத்து கொண்டாள் அருந்ததி.
மெலிந்து ஒடுங்கி போன தேகம். தொடை வரை நீண்ட கூந்தல் இருந்தும் அது வாரபடவில்லை. புடவை கூட சாயம் போன பழைய புடவை. காது, கை, மூக்கு என அனைத்தும் மொட்டையாக இருந்தது.
கழுத்தில் மட்டும் ஒரு மஞ்சள் கயிறு. அதுவும் பழையது என அதன் நிறமே கூறியது.
#antihero
#tamil #antiheronovel #history #audiobook #love #audiobook #niviammu #niviammunovels
#romanticlovestory #romance
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: