Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கோவிலை சுற்றி ரகசிய ஓட்டைகள்! இது கோவிலா முன்னோர்களின் ரகசிய ராக்கெட்டா? |பிரவீன் மோகன்

Автор: Praveen Mohan Tamil

Загружено: 2021-05-05

Просмотров: 167906

Описание:

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - விசித்திரமான ஓட்டைகள்
01:55 - 3D Model
03:32 - சிறிய ஓட்டைகள்
04:03 - பழங்கால Machining டெக்னாலஜி
04:37 - ஏன் இந்த ஓட்டைகள்?
09:18 - முடிவுரை

Hey guys, நான் இப்போ Hampi ல இருக்கற Vitthala ங்கிற ஒரு பழங்கால கோவில்ல இருக்கேன். இந்த கோவில சுத்தி விசித்திரமான துளைகள் நெறைய போடப்பட்டிருக்குன்னு நான் இப்ப கண்டுபிடிச்சேன். இத யாரும் பெருசா கவனிச்சிருக்க மாட்டாங்கன்னு தோணுது, ஏன்னா சுவர்கள ரொம்ப உன்னிப்பா ஆராஞ்சா மட்டும் தான், இந்த துளைகள கண்டுபிடிக்க முடியும்.
வரிசையா இருக்கற இந்த துளைகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு சென்டிமீட்டர் அகலம் இருக்கும். பழங்கால ஸ்தபதிகள் இந்த துளைகளை எப்படி உலகத்துலயே ரொம்ப கடினமான பாறைகள்ல ஒன்னான graniteல போட்டாங்க. .
இன்னைக்கு நாம, granite ல இந்தமாதிரி துளைகள போட வைர முனையோட இருக்கற துளை போடற கருவிகளதான் பயன்படுத்துறோம், ஆனா பழங்காலத்துல இத எப்படி பண்ணிருபாங்க? ஆனா இத விட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் ஒன்னு இருக்கு. தொடர்ச்சியா இருக்கற இந்த துளைகளுக்கு நேரா மேல, இன்னொரு வரிசை தெரியுது. அதுவும் இதே மாதிரி துளைகளோட வரிசை தான். ஆனா அந்த துளைகள் கீழ இருக்கறத விட இன்னும் கொஞ்சம் பெருசா இருக்கு. அப்புறம் அதுக்கும் மேல மூனாவது துளை வரிசையும் இருக்கு. இதெல்லாம் இந்த ஒட்டு மொத்த வடிவத்தயும் இன்னும் சிக்கலாக்குது. ஆனா இதுல ரொம்ப முக்கியம்மான கேள்வி என்னன்னா... இந்த துளைகள எப்படி அவங்க போட்டாங்கன்றது இல்ல ஆனா ஏன் போட்டாங்கன்றது தான்? இந்த துளைகள கோவில சுத்தி எல்லா எடத்துலயும் ஏன் போட்டாங்க? .
Archeologists என்ன சொல்றாங்கனா, இந்த துளைகள் எல்லாம் அலங்காரத்துக்காகவும், பூக்கள் இல்லனா தூபக் குச்சிகள வைக்கிறதுக்கும் இந்த கோயில சுத்தி போட்டிருப்பாங்க அப்படின்னு சொல்றாங்க. ஆனா இந்த வாதங்கள் எல்லாம் திருப்தியா இல்ல.
இந்த துளைகள் வெறும் அலங்காரத்துக்காக செய்யப்பட்டதா இல்ல இந்த கோவிலோட வடிவமைப்புல இதுக்கு ஏதாவது ஒரு முக்கிய பங்கு இருக்குதான்னு தெரிஞ்சிக்க ஏதாவது வழி இருக்கா?
பாருங்க, இந்த பழங்கால ஸ்தபதிகள் ரொம்ப அறிவாளிகளா இருந்திருக்காங்க. இந்த கட்டமைப்புகள் எல்லாம் எதிர்காலத்துல மனிதர்களால அழிக்கப்படும்ன்னு அவங்க முன்னாடியே தெரிஞ்சி வச்சிருக்காங்க.
அதனால அவங்க இந்த கோவிலுக்குள்ளயே ஒரு சின்ன முப்பபரிமாண மாதிரிய உருவாக்கியிருக்காங்க, அதாவது கோவிலோட 3D miniature. அத பாத்தா நாம இந்த கோவில பத்தின ரொம்ப முக்கியமான அம்சங்கள விவரமா தெரிஞ்சிக்க முடியுது. இந்த கோவில் படையெடுத்து வந்தவங்களால அழிக்கப்படுறதுக்கு முன்னாடி எப்படி இருந்துச்சுங்கிரத இந்த மாதிரி உங்களுக்கு தெளிவா காட்டுது.
இது முழுமையா கட்டப்பட்டு இருக்கு. பல நிலைகளோட இருக்கற கோவிலா இது இருந்திருக்கு. மேல கலசம் கூட இருக்கு.
பொதுவா இப்படி தான் ஒரு முழுமையான கோவில் இருக்கும். ஆனா நான் ஏன் இந்த கோவில்ல இருக்கற துளைகள பத்தி பேசிகிட்டு இருந்தப்ப இந்த கோவிலோட மாதிரி வடிவத்த உங்களுக்குக் காட்டுறேன்?
ஏன்னா, இந்த கோவில்ல இருக்கற துளைகள் ஒரு முக்கியமான காரணத்துக்காக செதுக்கபட்டிருந்தா, இந்த மாதிரி வடிவத்துலயும் அந்த துளைகள் இருக்கணும். அது வெறும் அலங்காரத்துக்காக செய்யபட்டிருந்தா, இந்த மாதிரியில விரிவா அத காட்டியிருக்க மாட்டாங்க. ஏன்னா இந்த மாதிரி வடிவத்துல ரொம்ப முக்கியமான விஷயங்கள மட்டும் தான் காட்டியிருக்காங்க.
அதனால இந்த மாதிரியில ஏதாவது துளைகள் செதுக்கப்பட்டு இருக்கான்னு நான் ஆராஞ்சி பாத்தேன். சரியா நான் தேடிட்டு இருந்தத கண்டும் பிடிச்சேன்.
இந்த மாதிரியில ரொம்ப சின்னதா செதுக்கப்பட்ட துளைகளோட வரிசைகள் இங்க இருக்கு பாருங்க. இந்த துளைகள் எல்லாம் வெறும் 1 மில்லிமீட்டர் அகலம் தான் இருக்கும். பழங்காலத்துல செதுக்கப்பட்டதுலயே ரொம்ப சின்னதா இருக்கற துளைகள நான் கண்டுபிடிச்சிருக்கேன்னு நெனைக்கிறேன்.
அதாவது, ஒரு மில்லிமீட்டர் அகலமுள்ள துளைகள், அதுவும் granite ல, பழங்கால ஸ்தபதிகள் உருவாக்கி இருக்காங்க.
எந்த இயந்திரங்களோட உதவியும் இல்லாம இது மாதிரியான ஒண்ண எப்படி செய்ய முடியும் ?
ஞாபகம் வச்சிகோங்க, இந்த hampi நகரம் மொத்தத்துலயும் பழைய எந்திர தொழில்நுட்பத்த பத்தின ஆதாரங்கள் நெறைய இருக்கு.
நான் ஏற்கனவே lathe எந்திரங்கள எப்படி பயன்படுத்துறதன்றத என்னோட முந்தின வீடியோல காமிச்சிருக்கேன். ((இங்க top right corner ல உள்ள கார்டு click பண்ணி அத பாக்கலாம். ))
அதனால இந்த மாதிரியில இருக்கற இந்த சின்ன துளைகள் மூலமா நாம தெரிஞ்சிக்கறது என்னன்னா , இந்த துளைகள் வெறும் அலங்காரத்திற்காக உருவாக்கப்படல ஆனா இதெல்லாம் கோவிலோட வடிவமைப்புல ஒரு முக்கிய பகுதிங்கிறத நாம தெரிஞ்சிக்கறோம்.
ஆனா இன்னொரு முக்கியமான கேள்வி ஒன்னு இருக்கு: இந்த கோவில சுத்தி ஏன் இந்த துளைகள் போடப்பட்டிருக்கு?
ஞாபகம் இருக்கா, ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி கட்டப்பட்ட பிரிஹதீஸ்வரர் கோவில்ல கூட இதே மாதிரியான சில துளைகள் இருக்கறத உங்களுக்கு நான் ஏற்கனவே காமிச்சிருக்கேன். இந்த கட்டமைப்புல கூட இந்த சின்ன துளைகள் அதோட அடிவாரம் மொத்தத்துலயும் இருக்கு. ஏன் இந்த பழங்கால கோவில்களோட அடித்தளத்த சுத்தியும் இந்த மாதிரி ரொம்ப சின்ன துளைகள் போடப்பட்டிருக்கு?
இத புரிஞ்சிக்க, பழங்கால கோயில்கள் உண்மையில எத குறிக்குதுன்னு நாம மொதல்ல ஆராயனும்.

#India #Ancienttechnology #praveenmohantamil

கோவிலை சுற்றி ரகசிய ஓட்டைகள்! இது கோவிலா முன்னோர்களின் ரகசிய ராக்கெட்டா? |பிரவீன் மோகன்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

6 НЕОБЪЯСНИМЫХ ДРЕВНИХ ОТКРЫТИЙ, ПОХОЖИЕ НА СОВРЕМЕННЫЕ МАШИНЫ

6 НЕОБЪЯСНИМЫХ ДРЕВНИХ ОТКРЫТИЙ, ПОХОЖИЕ НА СОВРЕМЕННЫЕ МАШИНЫ

ஜாடியில் அறிவியலை அடைத்த பழங்கால தமிழர்கள்! இன்றைய அறிவியலை மிஞ்சும் அந்த காலத்து கண்டுபிடிப்பு!

ஜாடியில் அறிவியலை அடைத்த பழங்கால தமிழர்கள்! இன்றைய அறிவியலை மிஞ்சும் அந்த காலத்து கண்டுபிடிப்பு!

🔴LIVE TVK Vijay Erode அதிரும் ஈரோடு💥உற்சாகத்தில் தவெகவினர் Vijay Tamilaga Vettri Kazhagam tamil news

🔴LIVE TVK Vijay Erode அதிரும் ஈரோடு💥உற்சாகத்தில் தவெகவினர் Vijay Tamilaga Vettri Kazhagam tamil news

80 фотографий, в которые невозможно поверить!

80 фотографий, в которые невозможно поверить!

விஷ்ணுவின் உண்மையான சக்கரம் இதுதானா? தாய்லாந்து அரசு ரகசியமா பாதுகாத்து வெச்சுருக்கும் அதிசய ஆயுதம்!

விஷ்ணுவின் உண்மையான சக்கரம் இதுதானா? தாய்லாந்து அரசு ரகசியமா பாதுகாத்து வெச்சுருக்கும் அதிசய ஆயுதம்!

ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள்! எப்படி தெரியுமா?  | பிரவீன் மோகன்

ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள்! எப்படி தெரியுமா? | பிரவீன் மோகன்

ДРУГОЙ, СТРАННЫЙ МИР НА СТАРИННЫХ ГРАВЮРАХ! Существовал ли он на самом деле?

ДРУГОЙ, СТРАННЫЙ МИР НА СТАРИННЫХ ГРАВЮРАХ! Существовал ли он на самом деле?

வேறு எங்கும் காண முடியாது அதிசயம் , கோடி லிங்கம் ,  Kotti Lingam

வேறு எங்கும் காண முடியாது அதிசயம் , கோடி லிங்கம் , Kotti Lingam

மண்டையோட்டுக்குள் மாயை! நினைத்துக் கூட பார்க்க முடியாத மாய உலகத்தின் வாசலா இந்த கோவில்?

மண்டையோட்டுக்குள் மாயை! நினைத்துக் கூட பார்க்க முடியாத மாய உலகத்தின் வாசலா இந்த கோவில்?

உண்மையான பாகுபலி அரண்மனை இதுதானா.!! - Ancient City in India - Hampi In Tamil

உண்மையான பாகுபலி அரண்மனை இதுதானா.!! - Ancient City in India - Hampi In Tamil

На чем на самом деле стоит Венеция?

На чем на самом деле стоит Венеция?

3I/АТЛАС отправил сигнал человечеству — нас выбрали… или тестируют? | Мичио Каку

3I/АТЛАС отправил сигнал человечеству — нас выбрали… или тестируют? | Мичио Каку

அசத்தலான முன்னோர்களின் இன்ஜினியரிங் டெக்னாலஜி! மறைக்கப்பட்ட இந்திய ரகசியங்களா? |பிரவீன் மோகன்

அசத்தலான முன்னோர்களின் இன்ஜினியரிங் டெக்னாலஜி! மறைக்கப்பட்ட இந்திய ரகசியங்களா? |பிரவீன் மோகன்

உலகத்தின் வினோதமான கட்டிடக்கலை இது தான்? கோவிலுக்குள் புதைக்கப்பட்ட பல ஆயிரம் டன் மணல்! பகுதி - 7

உலகத்தின் வினோதமான கட்டிடக்கலை இது தான்? கோவிலுக்குள் புதைக்கப்பட்ட பல ஆயிரம் டன் மணல்! பகுதி - 7

7 забытых самодельных систем отопления, которые согреют вас

7 забытых самодельных систем отопления, которые согреют вас

15 самых необычных деревьев, в существование которых сложно поверить | Часть 2

15 самых необычных деревьев, в существование которых сложно поверить | Часть 2

Учёные обнаружили структуру которой 100 тысяч лет, только взгляните…

Учёные обнаружили структуру которой 100 тысяч лет, только взгляните…

Вокруг 3I/ATLAS По Солнечной Системе Движутся Девять Таинственных Объектов

Вокруг 3I/ATLAS По Солнечной Системе Движутся Девять Таинственных Объектов

150 Исторических Фото, От Которых Наступает Настоящий Шок!

150 Исторических Фото, От Которых Наступает Настоящий Шок!

Венеция Стоит На СВАЯХ? Инженерная ложь о сваях, которые не гниют 1000 лет

Венеция Стоит На СВАЯХ? Инженерная ложь о сваях, которые не гниют 1000 лет

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]