எழுத்தாளர் சாந்தனின் படைப்புகள் குறித்த இலக்கியச் சந்திப்பு
Автор: Manthiramoorthi Alagu
Загружено: 2025-07-19
Просмотров: 199
வாசிப்போம் தமிழ் இலக்கிய வளர்ப்போம் குழுவின் சார்பாக ஜூலை 19 ஆம் தேதி சனிக்கிழமை மாலைநடைபெற்ற இலங்கை எழுத்தாளர் சாந்தன் படைப்புகள் குறித்த இலக்கியச் சந்திப்பின் காணொளி
1988-ல் வெளிவந்த “இன்னொரு வெண்ணிரவு” என்ற சாந்தனின் சிறுகதைத் தொகுதிக்கு அசோகமித்திரன் எழுதிய முன்னுரையில், “சாந்தனின் உருவ அமைதி பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவருடடைய கதைகள் எங்கு முடியவேண்டும் என்பதில் அவருக்குள்ள நிர்ணயத் திறன் அபூர்வமானது. இதுவே அவருடைய படைப்புக்கள் எழுத்துச் சிக்கனத்தோடு விளங்குவதற்குக் காரணமாகியுள்ளது. புனைகதையில் இதுவொரு விசேஷ சாதனை” என்கிறார்.
1999 -ல் வெளியான “ஒரு பிடி மண்” சிறுகதைத் தொகுதிக்கு பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய அணிந்துரையில் “அநாயசமாகப் பொருளை உணர்த்தும் திறன் சாந்தனிடத்தில் அபிரிமிதமாய் காணப்படுகிறது. ‘தான் கலந்து’ எழுதுதல் இலக்கியத்தில் போற்றத்தக்கப் பண்பாகக் கருதப்படுவதுண்டு. அம்முறையிலும் சில அற்புதமான ஆக்கங்கள் தோன்றியிருக்கின்றன. ஆனால், கூறப்படும் பொருளோடு உணர்ச்சிவசப்பட்டுக் கலந்துவிடாமல், அதனைப் புறநிலையில் வைத்து நோக்கி, அதிலே தோன்றும் அவலங்களையும் குறிப்பாக முரண்களையும் இயற்பண்புடன் சித்தரிப்பதும் ஒரு இலக்கிய முறையியலாகும். இம்முறையில் சாந்தனது கதைகளில், நடு உணர்வு நிலையும் பற்றற்று நிற்கும் பான்மையும் தெளிவாகப் புலப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார்.
எழுத்தாளர் சாந்தனின் படைப்புகள் குறித்து உரையாற்றியோர்:
1. எழுத்தாளர் முபீன் சாதிகா -- நினைவின் நீள் தடங்கள்
2. கவிஞர் சிவக்குமார் --- மணிப்பூர் நினைவுகள்
3. மந்திரமூர்த்தி அழகு -- அசோகவனம் அல்லது வேலிகளின் கதை
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் சாந்தனின் நிறைவுரையையும் காணலாம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: