எழுத்தாளர் பா.வெங்கடேசனின் புனைவுலகம் குறித்த இலக்கியச் சந்திப்பு
Автор: Manthiramoorthi Alagu
Загружено: 2025-11-15
Просмотров: 300
வாசிப்போம் தமிழ் இலக்கிய வளர்ப்போம் குழுவின் சார்பாக நவம்பர் 15-ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்ற எழுத்தாளர் பா.வெங்கடேசனின் புனைவுலகம் குறித்த காணொளி.
எழுத்தாளர் பா.வெங்கடேசனின் புனைவுலகம் குறித்து நண்பர்கள் தமிழ் விக்கியில் விரிவாக அறியலாம். முக்கியமான விவரம்.
பா.வெ. என்று எழுத்துலகில் அழைக்கப்படுகின்ற எழுத்தாளர் பா. வெங்கடேசன் எண்பதுகளின் இறுதியில் கவிதையின் மூலமாக எழுதத் தொடங்கியவர். மதுரையில் பிறந்து கல்லூரிக் காலம்வரை அங்கேயே வளர்ந்தவர். பணி நிமித்தமாக ஒசூருக்கு நகர்ந்து அதனையே வாழ்விடமாகக் கொண்டிருக்கிறார். கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், சிறு புதினங்கள், புதினங்கள் படைப்பாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவருடைய சீரிய பங்களிப்புகள்.
படைப்புகள் வரிசையில் இதுவரையில் 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள்,
4 குறும்புதினங்களின் தொகுப்பான ராஜன் மகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு,
2 கட்டுரைத் தொகுப்புகள் & 1 மொழி பெயர்ப்பு நாவலைத் தந்திருக்கிறார்.
இவரது தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம், வாராணசி ஆகிய மூன்று நாவல்களும் தமிழ் வாசிப்புலகில் விமர்சனரீதியாக கவனமும், பாராட்டும் பெற்ற சிறந்த படைப்புகளாகும்.
எழுத்தாளர் பா.வெங்கடேசன் புனைவிலக்கியத்தில் சீரிய பங்களிப்பிற்காக அம்பையின் ‘ஸ்பாரோ’, அமெரிக்கவாழ் தமிழர்கள் புதுமைப்பித்தன் பெயரால் வழங்கும் ‘விளக்கு’ மற்றும் தமிழ் திரு விருதுகளைப் பெற்று இருக்கிறார்.
இலக்கியச் சந்திப்பில் எழுத்தாளர் பா.வெங்கடேசனின் புனைவுலகம் குறித்து குறித்து உரையாற்றியோர்:
1.எழுத்தாளர் தூயன்
2.எழுத்தாளர் ரமேஷ் கல்யாண்
3.எழுத்தாளர் சவிதா
தொடர்ந்து எழுத்தாளர்கள் பலரும் எழுத்தாளர் பா.வெ. புனைவுலகம் குறித்த தங்களது கருத்துகளைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டனர். அடுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் பா.வெங்கடேசனின் ஏற்புரையையும், கலந்துரையாடலையும் காணலாம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: