‘சின்ன திருப்பதி’ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில்! Chinna Thirupathi, Karuvalli, Salem
Автор: Malar Amma Samayal
Загружено: 2025-07-21
Просмотров: 5208
‘சின்ன திருப்பதி’ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில்! Sri Prasanna Venkataramanar Temple, Chinna Thirupathi, Karuvalli
சேலம் அருகேயுள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலைதான் ‘சின்ன திருப்பதி’ என்று அழைக்கின்றனர். ஸ்ரீதேவி – பூதேவியுடன் ஸ்ரீபிரசன்ன வேங்கடரமண சுவாமி கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தின் சிற்ப வேலைப்பாடுகள் அனைத்துமே சோழர் கால பாரம்பரியத்தை நினைவூட்டுபவை.
அதேபோல், இது சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கோயில்தான் என்பதை இங்குள்ள கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன.
‘வனப் பகுதியில் குன்றின் மீது ஒரு பாம்பு இருந்தது. ஒரு சிறுவனால் ஒரு சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சிறுவனின் உன்னதாமான பக்தியில் திகைத்துப்போன திருமால், அந்தச் சிறுவனுக்கு அருள்பாலித்தார்.
அதுவே ‘சின்ன திருப்பதி’ என்று மக்களால் அழைக்கப்படுகிறது’ என்றும் ஒரு காரணக் கதைச் சொல்லப்படுகிறது.
ஆனால், தல புராணமோ இன்னொரு கதையையும் கூறுகிறது. இந்தப் பகுதி ஒரு காலத்தில் அடர் வனமாக இருந்தது. இடையர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மாடுகளை இங்கேதான் மேய்ச்சலுக்கு ஓடி வருவாராம்.
அவரது பசுமாடுகளில் ஒன்று தினமும் அங்குள்ள ஒரு புற்றுக்கு பால் சொரிந்து வந்ததாம். ஒருநாள் கோபமடைந்த அந்த இடையர் குலத்தவர் தன் கையில் இருந்த தடியால் அந்தப் பசுமாட்டை அடித்திருக்கிறாராம்.
அந்த பசுமாட்டை அடிக்கும்போது ஓர் அடி மட்டும் அங்கிருந்த புற்றின் மீது விழுந்தததாம். உடனே, அந்தப் புற்றில் இருந்து சுயம்பு மூர்த்தியாக பெருமாள் எழுந்தருளினாராம். இடையர் குலத்தவர் அடித்ததால் பெருமாளின் வலது பக்க தோளில் தழும்பு எற்பட்டதாம். அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பெருமாள் கோயில் அமைந்ததாம்.
அத்துடன், தன் தலைக்கு தேய்த்துக் குளிக்க அரப்பு அரைக்காய் தேடியபடி, திருப்பதியில் இருந்து இந்தப் பகுதிக்கு பெருமாள் வந்ததால் ‘சின்ன திருப்பதி’ என்ற பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
இந்தக் கோயிலில் மூலவராக வெங்கடேச பெருமாள் தரிசனம் தருகிறார். ஆண்டாள், மகாலட்சுமி, ரங்கநாதர், சக்கரத்தாழ்வார், ராமானுஜருக்கு தனித்தனி சன்னிதி இங்கே உள்ளது.
புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களிலும் இந்தக் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடக்கும். அதுபோலவே மார்கழியில் சொர்க்க வாசல் திறப்பு, தேரோட்ட நிகழ்வு என அவ்வப்போது விழாக்கள் களைகட்டும்.
குறிப்பாக, இந்தத் தலத்தில் சனிக்கிழமைகளில் வழிபட்டால், இதுவரை தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்ற நம்பிக்கை உண்டு. அதேபோல், ஸ்ரீபிரசன்ன வேங்கடரமண சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்தனை செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
சேலம் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் நிச்சயம் சென்று தரிசிக்க வேண்டிய தலங்களில் ஒன்றுதான் ‘சின்ன திருப்பதி’ என்று அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில்.
Follow Facebook Page :
/ malarammasamayal
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: