கட்டாயம் இல்ல!
Автор: Pesu Maname Pesu
Загружено: 2025-12-06
Просмотров: 78
மனதின் என்ன ஓட்டத்தை, அது இருக்க வேண்டிய தன்மையை,நாம் யோசிக்கும் முறையில், அதை மாற்றுவதற்கான தேவையை பட்டியல் இட்ட பாடல்.
பாடலாசிரியர் சு சிவக்குமார்
cell : 7550053222.
கட்டாயம் இல்ல பாத்துக்கோ எதுக்கும் காதுல வாங்கி போட்டுக்கோ
எட்டாத கனி என்று எதுவும் இல்லை கசப்புக்கு எட்டி காயும் வேணும் ஏதோ பசப்புரதாக நினைக்காதே பட்டினி கிடந்தும் பழகிக்கோ
பட்டினி கிடந்தும் பழகிக்கோ
தொட்டது எல்லாம் துலங்கும் என்பார்
எதுக்கும் தூரத்தில் வச்சு பார்த்துக்கோ
நெனச்சது எல்லாம் கிடைக்கும் என்பார்
மேலானது நினைக்காமலும் வரும் உனக்கு அனுபவம் இருந்தா ஏத்துக்கோ
அப்பட்டமாக சொல்வது என்றால் எதை நினைக்காமல் இருக்க கத்துக்கோ
எதை நினைக்காமல் இருக்க கத்துக்கோ
கட்டாயம் இல்ல பாத்துக்கோ எதுக்கும் காதுல வாங்கி போட்டுக்கோ
எட்டாத கனி என்று எதுவும் இல்லை கசப்புக்கு எட்டி காயும் வேணும் ஏதோ பசப்புரதாக நினைக்காதே பட்டினி கிடந்தும் பழகிக்கோ
பட்டினி கிடந்தும் பழகிக்கோ
மூடிய கதவு திறக்க முயலாதே
புதிய வாசல் ஒன்று புறப்பட்டு வரும் அதுவரை அமைதியாக இருக்க கத்துக்கோ
சேத்துல நடக்க செருப்பு வழுக்களாம்
கையில எடுத்து நடந்துக்கோ
யாருக்கோ இத சொல்றதா நினைக்காதே
எதுக்கும் காதுல வாங்கி தேடி காரணம் தேடி அலையாதே
உன் காரியம் நடக்கும் பாத்துக்கோ
காரணம் தேடி அலையாதே
உன் காரியம் நடக்கும் பாத்துக்கோ
கட்டாயம் இல்ல பாத்துக்கோ எதுக்கும் காதுல வாங்கி போட்டுக்கோ
எட்டாத கனி என்று எதுவும் இல்லை கசப்புக்கு எட்டி காயும் வேணும் ஏதோ பசப்புரதாக நினைக்காதே பட்டினி கிடந்தும் பழகிக்கோ
பட்டினி கிடந்தும் பழகிக்கோ
சொன்னா சொன்னது என்பார்
சில பேர்
அவர் அகந்தைக்கு போகாம விலகிக்கோ
முடிஞ்சா நடப்பதெல்லாம்
ஒரு ஓரமா நின்னு
வேடிக்க பார்க்க கத்துக்கோ
எல்லாம் முடிஞ்சுதா தோணும் இருந்து கடைசி வரைக்கும் காத்திருக்க பொறுத்துக்கோ
போற வரவர் ஆயிரம் சொல்வார் அதையும் கொஞ்சம் பொறுத்துக்கோ
நல்லது நடக்க நம்ம மனசையும் நடுநிலையில வைக்கணும் தெரிஞ்சுக்கோ
நல்லது நடக்க நம்ம மனசையும் நடுநிலையில வைக்கணும் தெரிஞ்சுக்கோ
கட்டாயம் இல்ல பாத்துக்கோ எதுக்கும் காதுல வாங்கி போட்டுக்கோ
எட்டாத கனி என்று எதுவும் இல்லை கசப்புக்கு எட்டி காயும் வேணும் ஏதோ பசப்புரதாக நினைக்காதே பட்டினி கிடந்தும் பழகிக்கோ
பட்டினி கிடந்தும் பழகிக்கோ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: