#காட்டுபாவா
Автор: Mr IMRAN Vlogs
Загружено: 2022-11-10
Просмотров: 13109
திருப்பத்தூர் அருகே 356 ம் ஆண்டாக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் காட்டுபாவா பக்ருதீன் பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில்
காட்டுபாவா பள்ளிவாசல் அருகே அடர்ந்த காட்டுபகுதியில் சகீத் பாறை என்ற இடத்தில் கி.பி 17 ம் நூற்றாண்டில் அரேபியா நாட்டைச் சேர்ந்த சையதுபக்ருதீன் அவ்லியா எனும் மகான் தங்கியிருந்தார். இவர் நாகூர் தர்காவில் அடக்கமாயிருக்கும் ஷாகுல்அமீது அவ்லியாவின் பேரன் ஆவார். அப்போது காட்டு வழியே மதுரை செல்ல 7 பிராமணப் பெண்கள் குழந்தைகளுடன் சென்றுள்ளனர். 7 கள்வர்கள் பெண்களை இடைமறித்து உடமைகளையும் மாணபங்க படுத்த முயன்றுள்ளனர். அதனை கண்ட பக்ருதீன் பாவா அவர்களுடன் சண்டையிட்டு 5 கள்வர்களின் கண் பார்வையை இழக்க செய்துள்ளார். மேலும் இரண்டு கள்வர்களிடம் மதுரை சென்று பத்திரமாக விட்டு வர வருமாறும் வந்தவுடன் இந்த 5 பேரின் பார்வையை மீட்டு தருவதாக கூறியுள்ளார். பெண்களிடம் பாதுகாப்பாக சென்றதற்கான அடையாளத்தை கள்வர்களிடம் கொடுத்துவிடுமாறு கூறியுள்ளார். மதுரை சென்று திரும்பிய கள்வர்கள் அடையாளத்தை காண்பித்தவுடன் 5 பேரின் கண் பார்வை திரும்ப கிடைத்துள்ளது. கள்வர்கள் அங்கிருந்து சென்றனர்.
சண்டையின் போது அம்பு பட்டதில் சகீன் பாறையில் பக்ருதீன் பாவா மரணமடைகிறார். கடந்த மாதம் 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் தினமும் சிறப்பு தொழுகை நடந்தது. சந்தனகூடு இழுப்பதற்கு முன் காட்டுபாவா பள்ளிவாசலில் இருந்து போர்வை மல்லிகை பூ போர்த்தி நல்லூருக்கு கொண்டு செல்லப்படும் அங்கிருந்து மீண்டும் போர்வை பள்ளிவாசல் வந்தடையும் அங்கு பக்ருதீன் பாவாவிற்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து அதிகாலை மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தனகூடு ஊர்வலம் நடைபெற்றது. ஊரணிகரையில் வரும்போது சுமார் 1 மணிநேரம் வண்ண வண்ண வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து தர்காவை வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் விழாவில் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சி, சுவீட் கடைகள் கடைகள் என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: