Balan Yesuvai | St. Joseph song | பாலன் இயேசுவை | சூசையப்பர் பாடல் | Christian song
Автор: DB Media Music
Загружено: 2018-03-17
Просмотров: 150575
பாலன் இயேசுவை திருக்கரத்தில் ஏந்திடும்
மரியின் துணைவரே எங்கள் சூசை தந்தையே
அன்பு நெறியிலே நின்று குடும்ப வாழ்வினை
கோவிலாக்கிய எங்கள் பாதுகாவலே (2)
உள்ளம் மகிழுவோம் உம்மைப் பாடியே
நன்றி கூறுவோம் ஒன்று கூடியே (2)
உழைப்பின் மேன்மையை இந்த உலகம் உணர்ந்திட
தச்சுத் தொழிலைத் தேர்ந்து கொண்டாய் தரணி மீதிலே
உண்மை அன்பு நீதியும் மண்ணில் ஓங்கிட
இறை திருவுளம் நீ ஏற்றுக்கொண்டாய் வாழும் போதிலே (2)
திருக்குடும்பத்தின் இனிய பாதுகாவலா
உந்தன் பிள்ளைகள் எம்மை வழிநடத்துமே (2)
உலக மீட்பர் இயேசுவின் உயிரைக் காத்திட
ஏரோதின் பிடியினின்று இழுத்து சென்றாயே
வாய் திறந்து பேசா உன் எளிய உள்ளமே
வீரமுழக்கம் செய்து எம்மை ஈர்க்கின்றதே (2)
திருக்குடும்பத்தின் இனிய பாதுகாவலா
உந்தன் பிள்ளைகள் எம்மை வழிநடத்துமே (2)
தூய வளனார் சூசையப்பர் பாடல்
Album : புனிதர்களின் பாதுகாவலில்
Composer : திரு அனிட்டர்
Singer : தினேஷ்
Producer : Bosco Maiyam, DB Alaihal Media
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: