Anjanai Maindha || Varam Tharum Sri Anjaneya || Hanuman Songs Tamil || Rahul || Vijay Musicals
Автор: Vijay Musical
Загружено: 2017-12-15
Просмотров: 2834471
Anjanai Maindha || Tamil Lyrical Video || Hanuman Jayanti || Singer : Rahul || Vijay Musicals || Music : Sivapuranam D V Ramani || Lyrics : P Senthilkumar || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Song || Lord Anjaneya || Varam Tharum Sri Anjaneya
Lyrics :
அஞ்சனை மைந்தா ஆஞ்சநேயனே
ஸ்ரீ ராம தூதனே வாயுபுத்ரனே
சொல்லில் செல்வனே செயலில் வீரனே
ராமபக்தனே சிவவீர மாருதி
ஜெயஜெய ஹனுமான் ஸ்ரீ ஜெயஜெய ஹனுமான்
ஜெயஜெய ஹனுமான் சிவவீர ஹனுமான்
அபயம் தந்திடும் ஆற்றலின் சூரா
தூயசீலனே துன்பங்கள் தீர்ப்பாய்
அடியார்க்கருளும் ஆண்டவன் நீயே
ராம நாமமே உந்தன் சுவாசமே
போற்றிப் பாடவா போரூரில் வாழ்பவா
போரில் வல்லவா பரம நல்லவா
பக்தி செய்பவா ராம பக்தி கொண்டவா
சித்தம் நிறைந்தவா சிரஞ்சீவியானவா
பாவம் தீர்ப்பவா பல சித்தி பெற்றவா
ஆசையை வென்ற ஆஞ்சநேயனே
சோளிங்க மணியே சுடரொளி திருவே
காருண்ய சீலா ஸ்ரீமதிஹநுமான்
மார்கழி மூலம் அவதரித்தவனே
அமரர்க்கருள அவணி வந்தவனே
ஸ்ரீராம் ஜெயராம் உந்தன் நாமம்
ராமனின் பாதம் உந்தனின் வேதம்
அஷ்டவ சனியால் அடையும் துன்பம்
அனைத்தும் நீக்கிடும் போரூர் ஹனுமான்
ராகவன் தூதா ஆதவன் வம்சா
மாதவம் புரியும் சஞ்சீவிராயா
வெண்ணை சாற்றினால் வெற்றித்தருபவா
நல்லெண்ணெய் காப்பிலே நல்லெண்ணம் அருள்பவா
வெற்றிலை மாலை வடை மாலையுமே
சாற்றிப் போற்றினோம் ஐஸ்வர்யம் அருள்வாய்
கர்மா யோகியே கரம் கூப்பிய உருவே
கார்ய சித்தியருளும் ராகவன் துணையே
ஆரியன் மகிழும் ஆண்டவன் நீயே
ஆசிகள் தருவாய் நீண்ட ஆயுளை அருள்வாய்
சுந்தர காண்டம் ஓதுவோர்க்கெல்லாம்
துன்பங்கள் தீரும் துயரங்கள் போகும்
மங்களம் பெருகும் வளங்கள் சேரும்
சங்கரன் அருளால் சங்கடம் விலகும்
ஆஞ்சநேயனே ராமபக்தனே
பாரதம் போற்றும் பரமதயாளா
சுந்தர ராஜா சுகமெல்லாம்த் தருவாய்
பொன்புகழ் அருள்வாய் பதமலர்த் தருவாய்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: