Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பச்சைப் பதிகம் | திருநள்ளாறு | போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் | திருஞானசம்பந்த சுவாமிகள்

Автор: SivamAudios

Загружено: 2022-02-04

Просмотров: 67603

Описание:

#SriDharbaranyeswararTemple | #Thirunallaru | #ThirugnanasambantharPathigam

iTunes -   / navagraha-suprabhatham-kavacham  
Wynk - https://wynk.in/music/album/navagraha...
Spotify - https://open.spotify.com/album/5u85iW...
Google Play -    • சுப்ரபாதம் - Suprabatham | நவகிரஹ சுப்ரபாத...  
Gaana - https://gaana.com/album/navagraha-sup...
Hungama -
7 digital - https://us.7digital.com/artist/bombay...
JioSaavn - https://www.jiosaavn.com/album/navagr...
Amazon - https://music.amazon.in/albums/B06XKF...
Raaga - https://www.raaga.com/tamil/album/nav...
Napster - https://us.napster.com/artist/bombay-...

திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது. சனி பகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய "போகமார்த்த பூண்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள்

திருமுறை : முதல் திருமுறை வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூண்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (01)

தோடுடைய காதுடையன் தோலுடையன் தொலையாப்
பீடுடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (02)

ஆன்முறையால் ஆற்ற வெண்ணீறு ஆடி அணியிழையோர்
பான்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (03)

புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன்சூடிப்
பல்க வல்ல தொண்டர் தம் பொற்பாத நிழற்சேர
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (04)

ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர்கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேலோர் ஆடரவம் சூடி
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (05)

திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (06)

வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி விண்கொண் முழவு அதிர
அஞ்சு இடத்தோர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள் சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (07)

சிட்டமார்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டுமாட்டி சுண்ண வெண்ணீறு ஆடுவது அன்றியும் போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால் மதியம் சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (08)

உண்ணலாகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி
அண்ணலாகா அண்ணல் நீழல் ஆரழல் போலுருவம்
எண்ணலாகா உள் வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (09)

மாசு மெய்யர் மண்டைத் தேரர் குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றை சூடி மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. ..... (10)

தண் புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே ..... (11)

பதிகப் பலன் : நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறையையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய, நல்லியல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் பிரார்த்த கன்ம வலிமை குறையப் பெற்று வானவர்களோடு தேவருலகில் வாழ்வர்.

பச்சைப் பதிகம் | திருநள்ளாறு | போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் | திருஞானசம்பந்த சுவாமிகள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பணத்தை அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | சிவன் பக்தி பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Bhakti

பணத்தை அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | சிவன் பக்தி பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Bhakti

பரசலூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில் ருத்ராபிஷேகம் | Dharumai Adheenam TV

பரசலூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில் ருத்ராபிஷேகம் | Dharumai Adheenam TV

கோளறு மகிமை | வாசுகி மனோகரன் | மதுரை தமிழ்ச்சங்கம் |

கோளறு மகிமை | வாசுகி மனோகரன் | மதுரை தமிழ்ச்சங்கம் |

SURYA BHAGAVAN WILL ERADICATE CURSES WHICH STOPS YOUR FINANCIAL GROWTH Lord Suryan | SIVAM AUDIOS

SURYA BHAGAVAN WILL ERADICATE CURSES WHICH STOPS YOUR FINANCIAL GROWTH Lord Suryan | SIVAM AUDIOS

சனிப்பெயர்ச்சி பாதிப்புகளை நீக்கும் திருநள்ளாறு பச்சை பதிகம் இனிய நாளாக அமைய இந்த பாடலை கேளுங்கள்

சனிப்பெயர்ச்சி பாதிப்புகளை நீக்கும் திருநள்ளாறு பச்சை பதிகம் இனிய நாளாக அமைய இந்த பாடலை கேளுங்கள்

பச்சைப் பதிகம் | திருநள்ளாறு | போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் | திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS

பச்சைப் பதிகம் | திருநள்ளாறு | போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் | திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS

தினமும் 5 முறை 7 நாள் இந்த மந்திரத்தை கூறினால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அள்ளி கொடுக்கும்

தினமும் 5 முறை 7 நாள் இந்த மந்திரத்தை கூறினால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அள்ளி கொடுக்கும்

கோளறு பதிகம் | Kolaru Pathigam |

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

பச்சைப் பதிகம் #திருநள்ளாறு  #திருமயிலை சற்குருநாத ஓதுவார் ஐயா |போகமார்த்த-திருஞானசம்பந்தப் பெருமான்

பச்சைப் பதிகம் #திருநள்ளாறு #திருமயிலை சற்குருநாத ஓதுவார் ஐயா |போகமார்த்த-திருஞானசம்பந்தப் பெருமான்

வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song -  Saradha Raaghav

வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song - Saradha Raaghav

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times

மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times

எதிரிகளின் சூழ்ச்சிகளை அடியோடு வேரறுக்கும் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார த்ரிஷதி | SRI  SATHRU SAMHARA TRISATHE

எதிரிகளின் சூழ்ச்சிகளை அடியோடு வேரறுக்கும் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார த்ரிஷதி | SRI SATHRU SAMHARA TRISATHE

மாசில் வீணையும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Masil Veenaiyum

மாசில் வீணையும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Masil Veenaiyum

Navagraha songs/தினமும் கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த நவகிரஹ  ஸ்லோகம் /powerful Navagraha slogam

Navagraha songs/தினமும் கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த நவகிரஹ ஸ்லோகம் /powerful Navagraha slogam

எதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ  II  SRI SATRU SAMHARA TRISATHE II

எதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II SRI SATRU SAMHARA TRISATHE II

பண்ணோடு  தினமும் கேட்போம்-  பன்னிரு திருமுறையில்  நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக

பண்ணோடு தினமும் கேட்போம்- பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

கோளறு பதிகம் Kolaru Pathigam -Tamil lyrics | Thevaram Padal | Sivapuranam D V Ramani | Vijay Musical

கோளறு பதிகம் Kolaru Pathigam -Tamil lyrics | Thevaram Padal | Sivapuranam D V Ramani | Vijay Musical

வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/  பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/ பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]