உனைத் தினம் தொழுதிலன் திருப்புகழ் பாடல் 8 விளக்கம்
Автор: தேன்தமிழ்துளிகள்
Загружено: 2021-11-15
Просмотров: 7961
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடல் 8
உனைத் தினம் தொழுதிலன் உனது இயல்பினை
உரைத்திலன் பல மலர் கொடு உன் அடியிணை
உறப் பணிந்திலன் ஒருதவமிலன் உனது ….அருள்மாறா
உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன்சிகரமும்வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன்… மலைபோலே
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொருபோதே
கலக்கு உறுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்து அலம் உறுபொழுது அளவைகொள்
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே
வினைத் தலம் தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு உடைந்து மெய் உகுதசை கழுகு உண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே
தினத்தினம் சதுர்மறை முநி முறைகொடு
புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயும் முநிவரர் தொழ மகிழ்வோனே
தெனத்தெ னந்தன என வரி அளி நிறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில்திகழ்
திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: