Thiruppalliyezhuchi | Perumal & Providence - Vol 8 | Dr Brindha Manickavasakan
Автор: Sound Creed
Загружено: 2025-01-10
Просмотров: 16873
Thiruppalliyezhuchi is a beautiful composition by Thondaradippodiazhwar in the section 917-926 verses of the Nalayara Divya Prabhandham. It is akin to the Suprabhatham hymns, to awaken Sri Ranganatha of Sri Rangam, the foremost of the 108 Divyadesams. The Azhwar requests Perumal to wake up, and through a journey of 10 verses heralds a new morning, describing the scenic beauty around. He speaks of the different celestial and worldly beings waiting for His grace and the air brimming with music and anticipation for His divine glance. This Prabandham is a prayer and much more - an outpouring of love and devotion, unwavering faith and patience in quest of His grace.
Ragams:
Asaveri
Ananda Bhairavi
Mohanam
Hamir kalyani
Dhanyasi
Saurashtram
Athana
Shankarabharanam
Kaapi
Surati
Dedicated to the Thirunangur Perumals on Vaikunta Ekadasi and to Manchinillar D. Balasundaram for his devotion and continued seva to Perumal on his 80th birthstar (Bharani)
Credits:
Song Tuned & Sung by Dr. Brindha Manickavasakan
Musical Arrangements by Ravi G & Bharat Sundar
Violin Arrangements by Sayee Rakshith
Nadaswaram by Pazhayaseevaram G Kalidass
Thavil by Adyar G Silambarasan
Mridangam by Sarvesh Karthick
Veena by Veena Venkatramani
Artwork by Sagar Verma
Mix and Mastered by Ishit Kuberkar at Sound Potion Studios
Project Curated by Aditya Balasundaram, Natteri Srihari Parthasarathy Swami & Bharat Sundar
Video editing by Adharsh Devarajan
Music Produced and Owned by Sound Creed LLP
Copyrights owned by Sound Creed LLP
________________________________________________________________________
Lyrics:
திருப்பள்ளியெழுச்சி (தொண்டரடிப்பொடி ஆழ்வார்)
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்தொழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ||1||
கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
வெள் எயிறுற அதன் விடத்தினுக்கனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ||2||
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ||3||
மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக்குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியைக் காத்து - அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ||4||
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ||5||
இரவியர் மணி நெடுந்தேரொடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ||6||
அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ||7||
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றதிருள் போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ||8||
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்–ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ||9||
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்தேறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்றருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே ||10||
Translation available in:
https://prabhandam4000.in/vol_5b_index/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: