ஞான முனீஸ்வரர் 108 போற்றி | Gnana Muneeswarar 108 Potri | Trivandrum Sisters | Aanmeega Payanam
Автор: Aanmeega Payanam
Загружено: 2022-02-17
Просмотров: 110414
Song : Gnana Muneeswarar 108 Potri - Lyrical Video
Singers : Trivandrum Sisters
Lyrics : Dr. Krithiya
Music : Kanmaniraja
Video : Kathiravan Krishnan
Production : Venkateswara Oil Mill, Chennai
Channel : Anmiga Payanam
பாடல் : ஞான முனீஸ்வரர் 108 போற்றி - தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
கவியாக்கம் : Dr. கிருதியா
இசை : கண்மணிராஜா
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : வெங்கடேஸ்வரா ஆயில் மில், சென்னை
அலைவரிசை : ஆன்மிக பயணம்
பாடல்வரிகள் :
சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குரு நெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவ நெறி சன்மாக்கம்சேர்ந்துய்ய
வையத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே
ஐயனே ஞான முனீஸ்வரா போற்றி
தெய்வ மாஞான முனீஸ்வரா போற்றி
சைவ மாநெறியோங்க வந்தவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
சிங்கப்பூர் சிறந்தோங்க எழுந்தவா போற்றி
எங்கப்பர் எனும் பக்தர் எந்தையே போற்றி
கங்கை ப்ரவாகமாய் பொங்குவாய் போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
செங்காங்கில் உதித்த நல் மங்கலமே போற்றி
திங்களடி சிவஞான சிற்பரமே போற்றி
சங்கத் தமிழ் சங்கத் தலைவனே போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
சித்தனுள் சிவனான சிதம்பரா போற்றி
அத்தனுள் அம்மையாய் இருப்பவா போற்றி
முத்து மாரத்தினம் அணிபவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
ராஜ அலங்காரம் சூடுவாய் போற்றி
ஈச சிவலிங்கத்தில் கலந்தவா போற்றி
தேசப் பெருஞ்செல்வம் ஆனவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
சிவபுரம் மூலமாய் கொண்டவா போற்றி
சிங்கபுரம் கடவுளாய் அமர்ந்தவா போற்றி
திரிபுரம் மும்மலம் எரிப்பவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
வேல்முருகன் உடனெழும் வேந்தனே போற்றி
மால்மருகன் சிந்தைமகிழ் மாமுனி போற்றி
பாலருவி நீராடும் பரமனே போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
சந்தனக் காப்பினில் சிறப்பவா போற்றி
சந்தான பாக்கியம் அளிப்பவா போற்றி
சிந்தனை செய்வாயென் சிவலிங்கம் போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
ஆலய நாயகம் ஆனவா போற்றி
நூலேடு திருக்கரம் கொண்டவா போற்றி
பாலகர் தோஷத்தை களைபவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
சின்முத்திரை காட்டும் சீலனே போற்றி
தன்முத்திரையிட்டு காப்பவா போற்றி
ஜென்மக் கரைசேர்க்கும் சேவடிகள் போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
வெண்தாடி புரண்டாடும் மார்பழகா போற்றி
பண்வேந்தல் தேவாரம் ரசிப்பவா போற்றி
வெண்முத்து கிரீடமணி ராஜனே போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
ஓம் என்னும் ஆரமே அணிந்தவா போற்றி
சாமத்திலும் எம்மைக் காப்பவா போற்றி
பூமத்தியில் மலரும் நந்தவனம் போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
மரகதப் பச்சைக்கல் மாமணி போற்றி
அரஹர என்பார்க்கு வருகிறாய் போற்றி
வரங்களை வழங்கிடும் கார்மேகம் போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
தவலோக பாளையம் தந்தவா போற்றி
சிவலோகம் சிங்கையில் காட்டுவாய் போற்றி
இகலோக வளம் யாவும் தருபவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
நிறைநிலா காலத்து பரவசம் போற்றி
குறையிலா வாழ்வினை அருளுவாய் போற்றி
கனி பெற்று கனி தரும் காவலா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
நந்தியம் பெருமானின் நாயகா போற்றி
பந்தியில் அன்னமிடும் பரமசிவம் போற்றி
சந்திர வணக்கத்தை ஏற்பவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
குரு பூஜை படையலை ஏற்பவா போற்றி
மலர் பூஜை மறையோசை மகிழ்பவா போற்றி
குறையோசை காட்டாத பக்தவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
சிவ மூலிதனைச் சூடும் தவநாதன் போற்றி
பவ பயம் போக்கிடும் பசுபதி போற்றி
நவநாதர் வழங்கிடும் நாயகா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
ருத்ரயாகம் ஏற்கும் ருத்திரனே போற்றி
பத்ரகுண்டலம் அணியும் சித்தனே போற்றி
சித்தர் புடைசூழ வரும் தத்துவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
பழமர வடிவோடு வந்தவா போற்றி
காலமதில் ஆலமரம் ஆனவா போற்றி
முத்துமாரி மகிழ் முன்னவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
குறுங்காலீஸ்வரன் அம்சமே போற்றி
இருதாள் பற்றினார் இன்பமே போற்றி
வருங்காலம் யாவர்க்கும் அளிப்பவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
கலைமகளைத் தாமரையில் கொண்டவா போற்றி
அலைமகளை அடியார் கை அளிப்பவா போற்றி
மலைமகள் மாரி சொல் மகிமையே போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
வெண்பட்டு அணிகின்ற வேதமே போற்றி
புண்பட்டு வருவார்க்கு அமுதமே போற்றி
மனம் விட்டு பேசிட கேட்பவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
ருத்ராக்ஷ மாலை அணிந்தவா போற்றி
நித்திரையில் வந்தருள் நிமலனே போற்றி
சத்ருக்கள் இல்லாத செல்வவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
கும்பக் கலசங்கள் ஏற்பவா போற்றி
கும்பமுனி தம்பி தான் தோழரே போற்றி
நம்பகம் ஊட்டும் கனித் தருபவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
அருட்பால் சுரக்கின்ற அருவியே போற்றி
ஞானப்பால் ஊட்டுகிற நற்குரு போற்றி
அணைப்பால் தாயாகி நிற்பவா போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
சிங்கை மாதேசத்தை காப்பவா போற்றி
எங்கெங்கும் ஏற்றம்தனை காட்டுவாய் போற்றி
எல்லோர்க்கும் எல்லாமே அருளுவாய் போற்றி
செங்காங் ஞான முனீஸ்வரா போற்றி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: