பாத்திமா மாதா பாடல் - Fatima Matha Song
Автор: Tamil Anmeeha Paniyaham
Загружено: 2025-05-10
Просмотров: 123369
by Italy Tamil Anmeeha Paniyaham
Lyrics:
அருள் நிறைந்த மரியே எங்கள் தாயே - என்றும் அடைக்கலம் பாதாரவிந்தம் தானே
பரமனிடம் எமக்காய் பரிந்து பேச - உம்
பிள்ளை நாம் வேண்டுகின்றோம் தாயே
நோயால் வருந்துகின்றோம் - மனக் கவலைகளால் நொந்தோம்
தோல்விகளால் துவண்டோம் - உம் துணையை வேண்டுகின்றோம்
அன்புருவே அருள்வடிவே எம் அல்லல் நீங்க வேண்டிடம்மா.
அருள் நிறைந்த....
பாத்திமா நகரினிலே அருள்பாலிக்கும் தாயே
பாவிகள் மனந்திரும்ப தரிசனம் தந்தீரே
நிலைவாழ்வை நாம் அடைய செபமாலை அளித்தீரெ
சேய்களெம்மை அணைத்திடுவீர் செபமாலை மாதாவே
நோயால்.....
உள்ளங்கள் உருகிடுதே உம் அன்பைச் சுவைக்கையிலே
இல்லங்கள் தேடி வந்தீர் எம் குறை போக்கிடவே
உம் பாதம் அமர்ந்து நாம் திருமுகம் நோக்குகின்றோம் - எம் மனம் அறிந்து நீர் எமக்காக வேண்டிடம்மா
நோயால்....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: