சின்ன மடுமாதா பாடல் - Hymn to Sinnamadu Matha
Автор: Tamil Anmeeha Paniyaham
Загружено: 2025-10-04
Просмотров: 1094
By Tamil Anmeeha Paniyaham
Lyrics:
சின்ன மடு மாதாவே
சீரிளமைக் கன்னிகையே
முன்னோர் செய் தவப்பயனாய் எம்மூரில் குடியமர்ந்தாயே -2
வாழ்க வாழ்க தாயே
வாழ்க என்றும் நீயே -2
அதிகாலை வேளையிலே அன்னையுனைத்
துதித்திடுவோம்
துதி பாடும் நேரத்திலும் உம் புகழைப் பரப்பிடுவோம் -2
பொன் பொருள் துலங்கிடவும் மண் வளங்கள் ஓங்கிடவும் -2
அன்னை உந்தன் தயவாலே -அருள் வளங்கள் நிறைத்திடுவாயே -2
வாழ்க வாழ்க.....
பட்டி தொட்டி பெருகிடவும் காடு வயல் கதிர் தந்திடவும்
நாட்டுமக்கள் நலம் பெறவும்
நாயகியே கருணை செய்வாய் -2
தீயவழி செல்லாமல் தீமையெம்மை அணுகாமல் -2
தாயவளே காத்திடுவாய் கண்மலர்ந்து நோக்கிடுவாய் - 2
வாழ்க வாழ்க.....
பதியினிலே நீயமர்ந்து பல வினைகள் தீர்க்கின்றாய்
கதியென்று வருவோர்க்கு நல்லருள் பொழிகின்றாய் -2 மண்ணாழும் தாய் மரியே எம் மண்ணிற்கமைதி
தந்திடுவாய் -2
விண்ணவன் அருளாலே புதுயுகம் படைத்திடுவாய் -2
வாழ்க வாழ்க....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: