மந்திரமாவது நீறு | Thiruneetru Pathigam - Lyrics | Manthiramavathu | D V Ramani | Vijay Musicals
Автор: Vijay Musical
Загружено: 2018-02-17
Просмотров: 1867850
Thiruneetru Pathigam | Thavam Seithen Arul Seithaai | Irandam Thirumurai
Singer & Music : Sivapuranam D V Ramani
Lyrics : Thirugnanasambanthar
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#Sivansong#Thiruneetrupathigam#VijayMusicals#dvramani
திருநீற்றுப்பதிகம் | தமிழ் வரிகளுடன்
பாடல் : மந்திர மாவது நீறு
பாடியவர் : சிவபுராணம் D V ரமணி
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் | Lyrics :
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் நதீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் றிருநீறே
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் றிருநீறே
பூச வினியது நீறு புணிணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு நிருவால வாயான் றிருநீறே
அருத்தமதாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே
எயிலது வட்டது நீறு இருமைக்க முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான்றிரு நீறே
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவடு நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யாலவா யான்றிரு நீறே
மாலோ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்க டங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலமு துண்டமி டற்றெம் மாலவா யான்றிரு நீறே
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவருபணிந் தேத்து மாலவா யான்றிரு நீறே
ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்றிரு நீற்றை
போற்றிப் புகலிநி லாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுட லுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: