குறுந்தொகை பற்றிக் கொஞ்சம்: பாடல் 61
Автор: Suren R
Загружено: 2014-09-01
Просмотров: 3184
தச்சன் செய்த சிறு மா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர்.
உற்று இன்புறேம் ஆயினும் நல் தேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம், செறிந்தன வளையே!
தும்பிசேர்கீரன்
குறுந்தொகை 061
திணை: மருதம்
சூழல்: பரத்தையரை விரும்பிக் காதலியைப் பிரிந்து சென்றான் காதலன்.
பின்னர் மனம் திருந்தி, தன் சார்பாகப் பாணனைப் பேச அனுப்புகிறான்.
அவனிடம் தோழி சொல்வது
பாணனே,
தச்சர் ஒரு சிறிய குதிரை வண்டி செய்கிறார். அதில் ஏறிச் சவாரி செய்ய
விரும்புகிறது குழந்தை. ஆனால், அது நடக்காது. ஆகவே, அந்த வண்டியை
இழுத்துச் சென்று சந்தோஷப்படுகிறது.
அதுபோல, நல்ல தேர்களையும் பொய்கைகளையும் கொண்ட ஊரைச் சேர்ந்த உன் தலைவன்,
என் தோழியைத் தழுவவில்லை என்றாலும், அவனோடு கொண்ட நட்பை எண்ணி அவள்
வாழ்கிறாள். அதனால், அவளுடைய கையில் உள்ள வளையல்கள் கழன்றுவிழவில்லை.
+++
பேசுபவர்: என். சொக்கன்
/ nchokkan
-uploaded in HD at http://www.TunesToTube.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: