கோயம்பத்தூர் 250S மாவட்ட அலையன்ஸ் சங்கம் சார்பில் பொங்கல் விழா
Автор: MEDIA 360 News
Загружено: 2026-01-13
Просмотров: 222
கோயம்பத்தூர் 250S மாவட்ட அலையன்ஸ் சங்கம் மற்றும் இரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப் பள்ளி இணைந்து பொங்கல் விழா இன்று காலை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வானது, மாவட்ட ஆளுநர் AGA அலை M. குணசேகரன் தலைமையில் விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் ரத்தினபுரி அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை K சரோஜா வரவேற்றுப் பேசினார்.
31-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைரமுருகன் பொங்கல் விழாவினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக, பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கோலப்போட்டிகள் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது. இறுதியில் போட்டியில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோயம்புத்தூர் அலையன்ஸ் கிளப் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
உடனடி பன்னாட்டு இயக்குனர் AGA அலை T ஸ்ரீனிவாசன், தெற்கு கூட்டு மாவட்ட அமைப்பின் PRO AGA அலை N ராஜன், மாவட்டச் செயலாளர் அலை N லோகநாதன், மாவட்ட ஆலோசகர் அலை S பிரபாகரன், மண்டலத் தலைவர் அலை S மாணிக்கம், வட்டாரத் தலைவர் அலை V குமரவேல், காந்திபுரம் சங்கத்தின் தலைவர் அலை N பிரகாஷ், ஆதி சங்கத்தின் தலைவர் அலை V மாணிக்கவாசகன், மாவட்டத் தலைவர் கண் சிகிச்சை முகாம், அலை M ஜோதி பிரகாஷ், சேரன் சங்கத்தின் உறுப்பினர் அலை T முரளி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் அலை R. கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடினை செய்தார்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளியை அலங்கரித்தும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல போட்டிகள் நடத்தியும் பொங்கல் சிறப்பாக நடைபெற உதவி செய்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: