Vaanam Bhoomiyoo || Vedanayagam Sastriar Christmas Song || Sastriar Mrs. Sarah Martin || The Martins
Автор: The Martins
Загружено: 2020-07-23
Просмотров: 9980
Song : Vaanam Bhoomiyoo
Album : Kirubayin Keerthanaigal
Lyric : Vedanayagam Sastriar – 1827
Sung and Performance : Sastriar Mrs. Sarah Martin
Music : A. Christiyaan Kutti
Video : Mukesh, Coimbatore
Copyrights : D.K.Enterprises
Ragam: Desh
Thalam: Rubaga Thalam
வெண்பா
காரணமோ மானிடர் கண்காட்சியோ சொல்லுகின்ற
ஆரணமோ என்ன அதிசயமோ-பூரணமே
ஆனதெல்லாஞ் செய்த அனாதியாயிருப்பதற்கு
வானமோ மாட்டுக் குடில்.
பல்லவி
வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ என்ன இது.
அனுபல்லவி
ஞான வான்களே நிதானவான்களே.
வான
சரணங்கள்
1.பொன்னகர சாளும் உன்னதமே நீளும்
பொறுமை கிருபாசனத்துரை பூபதி வந்ததேததிசயம்.
வான
2. சத்திய சருவேசன் நித்தியக்கிருபை வாசன்
நித்திய பிதாவினோர் மகத்துவக் குமாரனோ இவர்.
வான
3. அரூபரூப சொரூபன் கேரூபின் வாகன தீபன்
வீரியப் பிரதாபன் சீனாவெற்பிலிருந்தவன்
கற்பனைத்தந்தவன்.
வான
4. மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி.
5. வேறே பேரல்ல சுரர் விண்ணவ ராருமல்ல
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லிற் கிடக்கிறார்.
6. சீயோனின் மாதேயினிச் செணந் தரியாதே
மாயமென்ன வுனக்குச் சொல்லவோ
வந்தவர் மணவாளனல்லவோ.
7. ஆதாமின் குலமே யிதானாலும் புதுமை
வேதநாயகன் பாட்டுப் பார்த்தது
மேசியாவின் விளையாட்டுக் கேர்த்தது
(ஆ என்ன இது)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: