கருணா மூர்த்தி - Karuna Moorthy || Bhagavan Baba || Rahul || Shirdi Sai Baba Song || Vijay Musicals
Автор: Vijay Musical
Загружено: 2017-09-07
Просмотров: 2358711
Karuna Moorthy || Tamil Lyrical Video || Bhagavan Baba || Singer : Rahul || Composer : Senkathirvanan || Music : Pradeep || Vijay Musicals || Video : Kathiravan Krishnan || Shirdi Sai Baba, Ellam Sai
Lyrics :
கருணா மூர்த்தி தருவாய் கீர்த்தி,
பகவான் பாபா நீ தானய்யா,
அருள்மாமலையே அழியா புகழே,
உனையன்றி வேறு கதி ஏதய்யா
அடியார் வாழ்வில் தடைப்பல நீக்கும்
ஸ்ரீ சாயி நாதன் நீ தானய்யா
உனையே நாடி உன் புகழ் பாடி
வருவோம் நாங்கள் கண்பாராய்
விடியா வானம் நொடியினில் பூக்கும்
அதுவும் உந்தன் அருளாகும்
பாபா நீ எங்கள் வழித்துணை ஆனாய்
பணிந்தவர் வாழ்வை வளமாக்கினாய்
அடைக்கலம் தரும் தெய்வம் நீ தானே
ஆனந்தம் பல கோடி காண்பேனே
உனது முகம்பார்த்து உருகி அழும்போது
துயரம் கரைந்தோடும்
கனவு பலகோடி உனது பதம்நாடி
வந்து இளைப்பாறும்
சாய் உந்தன் அருளாலே மனக்குறை ஆறும்
விரைவினில் தீரும் மெய்தானய்யா
திருவடி நிழலொன்றே ஆதாரமே
தினமுந்தன் திருப்பாடல் பூபாலமே
கருணை முகத்தோடு அருளும் ஒரு தெய்வம்
உலகில் நீயன்றோ
அருளின் வடிவாக அமர்ந்த பாபாவே
எங்கள் தாயன்றோ
தீராத நோயெல்லாம் விலகியே ஓடும்
தினமுன்னை தொழுதிட பரவசமாகும்
மனமுன்னை நினைக்காத நாளேது
மாமழைக் காணாத பயிரேது
கவலை துயரங்கள் களையும் மேகங்கள்
அது உன் அருளாகவும்
பிறவி ஒரு கோடி எடுத்து வரும்போது
இதயம் உனைத்தேடும்
போராடும் வாழ்நாளை தடம் மாற்றுவாய்
புனிதனாய் பூமியில் நீ தோன்றினாய்
உனக்கொரு நிகரில்லை பாபாவே
ஓயாமல் உனைப்பாடி மகிழ்வேனே
எதுவும் உனதாகும் இருளும் ஒளியாகும்
உலகம் வளமாகும்
நித்தமும் உனைக்காண பெருகும் அடியாரின்
பக்தி திருக்கூட்டம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: