குறுந்தொகை பற்றிக் கொஞ்சம்: பாடல் 72
Автор: Suren R
Загружено: 2014-09-22
Просмотров: 809
பூ ஒத்து அலமரும் தகைய, ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே,
தேமொழி, திரண்ட மென் தோள், மாமலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழைக் கண்ணே.
மள்ளனார்
குறுந்தொகை 072
திணை: குறிஞ்சி
சூழல்: காதலன் உடலில், பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்ட பாங்கன் விசாரிக்கிறான். அவனுக்குக் காதலன் சொல்லும் பதில்
பெரிய மலையில், பருத்தியை இடையே விதைத்த தினைப் புனம். அங்கே தினைப் பயிரைச் சாப்பிட வரும் குருவிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி.
அவள் தேன் போன்ற குரல் கொண்டவள், பெரிய, மென்மையான தோள்களை உடையவள். அவளுடைய பெரிய, குளிர்ச்சியான கண்கள் பூவைப் போன்றவை, அங்கும் இங்கும் சுற்றிச் சுழல்பவை.
ஆனால், பின்னர் அதே கண்கள் அம்புபோல் மாறி என்னைக் குத்தின. எல்லாரும் அறியும்படி காதல் நோயை உண்டாக்கின.
+++
பேசுபவர்: என். சொக்கன்
/ nchokkan
-uploaded in HD at http://www.TunesToTube.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: