உருவான பிள்ளையார் கரங்கொண்டு தான்செய்த உமையவளே உலகாளவா
Автор: அருள்செல்வனின் செவிச்செல்வம்
Загружено: 2025-09-13
Просмотров: 133
உருவான பிள்ளையார் கரங்கொண்டு தான்செய்த உமையவளே உலகாளவா
தெருவினில் அழுதிட்ட பிள்ளைக்கு பாலீந்த பைங்கொடியே பாராளவா
திருநடனம் தில்லையில் தினங்காட்டும் திரிசூலி தொழுகின்றேன் உனை தினமே
பெரு வெடிப்பில் பேரண்டம் படைத்திட்ட பெரும் சக்தி பார் எனை ஒரு கணமே
திருமகள் கலைமகள் தேவரும் மூவரும் தொழுதிடும் சுந்தரியே
அறுமுகன் ஐங்கரன் ஐவரைப் பெற்றிட்ட அருள் தரும் அந்தரியே
உருவான பிள்ளையார் கரங்கொண்டு தான்செய்த உமையவளே உலகாளவா
தெருவினில் அழுதிட்ட பிள்ளைக்கு பாலீந்த பைங்கொடியே பாராளவா
விரிசடை வேந்தனின் பருகிய விடம் தனை அமுதாக்கும் அருள்
அன்னையே
அரு உரு வான லிங்கத்தின் அம்சமாய் தோன்றிடும் அருள் உண்மையே
அருமைமிகு செந்தமிழ் அமுதமென ஆறாக பாடவைத்த பட்டரையே
பெருமைமிகு நம்தமிழ் நாட்டினில் அந்தாதி அளித்திட்ட அபிராமியே
உருவான பிள்ளையார் கரங்கொண்டு தான்செய்த உமையவளே உலகாளவா
தெருவினில் அழுதிட்ட பிள்ளைக்கு பாலீந்த பைங்கொடியே பாராளவா
வரம் வேண்டி நிற்போர்க்கு வள்ளலாய் உருக்கொண்டு வற்றாத உன் கருணையை
கரங்கொண்டு அருளிடும் கற்பகத் தருவான கற்பகம் எனும் அன்னையே
உரங்கொண்ட நெஞ்சையும் அருள் கொண்டு உருக்கிடும் உள்ளொளி ஆனவளே
சிரத்தினில் பிறைசூடும் சிவனார்க்கும் சீவனாய் சொல் ஓளி தான் அவளே
உருவான பிள்ளையார் கரங்கொண்டு தான்செய்த உமையவளே உலகாளவா
தெருவினில் அழுதிட்ட பிள்ளைக்கு பாலீந்த பைங்கொடியே பாராளவா
பொருள்: சொல் ஓளி - சொல்லில் சத்தியம்
பாடல்களில் சில நேரங்களில் எழுத்துப்பிழை நிகழ்ந்து விடுகிறது. என் பணிச்சுமையின் காரணமாகவும் மேலும் மேலும் பாடல் வெளியிடுவதில் தாமதமாவதாலும் கவனக்குறைவைப் பெற்றுவிடுகிறேன். ஒரு மொழியில் பிழை செய்வதை பெரிய குற்றமாகக் கருதுவதால், அந்த தவறுக்காக உங்கள் அனைவரின் முன்னும் தலைகுனிந்து மன்னிப்புக் கோருகிறேன். 🙏🙏🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: