110 கீர்த்தனை | வான ராச்சியம் வந்தது | Vaana Rachiyam | composer thought | Michael Samraj
Автор: Composer Thought
Загружено: 2022-09-21
Просмотров: 743
Tune Composed by,W.Michael Samraj
D minor 7/8 110bpm
இராகம் : பைரவி
சாபு தாளம்
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
to support, G pay : 9443559470
பைரவி சாபு தாளம்
பல்லவி
வான இராச்சியம் வந்தது பாரீர் !
மாந்தரே! மனம் திருந்த வாரீர் !
அனுபல்லவி
ஆன சாட்சி, தியான சூட்சி, மெய்ஞ்
ஞான காட்சியர், தோன்றினார். - வான
சரணங்கள்
1. மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்,
வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே;
என்னிலும் பெரியார் வலியார் அவர்
இந்நிலத்திடை மேவினார்; உயர் உன்னதக் கிருபை ஆழமே! - வான
2. பிந்தி வந்தவர், முந்தி இருந்தவர்;
பேசரும் பொருளார், பரம்பர[1] நேசர், நம் கருணாம்பரர்,[2]
சுந்தரப் பரிபூரணர், காரணர்,
ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில்[3] மேவினார் - வான
3. அண்ணலார் பாத ரட்கையின் வாரையே
அவிழ்க்க, வாய்மையில்[4] எடுக்க, அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்;
திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே;
தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார். - வான
4. மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
வைத்திருக்குது, பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும்,
வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு
வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார் - வான
5. தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது;
துறையினில் தமதுரிய நற்களம் மற விளக்கி, அறுதியிலே
தோற்றக் கோதுமை கேயத்தில்[5] சேர்த்துமே
தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இந் நேரமே - வான
வே. சாஸ்திரியார்
[1] பரலோக
[2] கடவுள்
[3] பூமியில்
[4] வலிமையில்
[5] வீட்டில்
110 கீர்த்தனை | வான ராச்சியம் வந்தது | Vaana Rachiyam | composer thought | Michael Samraj W.Michael Samraj
State bank of India
Sb A/C 1193526246
IFSC : SBIN0000937
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: