வதிரி - உல்லியனொல்லை கண்ணகை அம்மன்
Автор: arayampathy lk
Загружено: 2024-09-03
Просмотров: 834
பாடலாக்கம்:
கவிஞர் செ. சுதர்சன்
இசையுரு & குரல்:
'அதிமதுரகானன்'
அ.கிருஷ்ணானந்தன்
: புல்லாங்குழல்:
'குழலிசைநேசன்'
ப. குமணன்
இசையமைப்பு & ஒலிக்கலவை:
'இசைக்கதிர்'
கு. ராஜ்குமார்
வதிரி - உல்லியனொல்லை
கண்ணகை அம்மன்
ஆக்கம்: புலவர் செ. சுதர்சன்
##########################
பல்லவி:
உல்லிய னொல்லை வாழ் கண்ணகியே - அம்மா
உள்ளம் எல்லாம் திகழ் நாயகியே
அனு பல்லவி:
பழகிடும் தமிழ்ச் சுவைப் பா எடுப்பேன் - அம்மா
பழம் பெரும் கிழவி உன் கதை வடிப்பேன்
சரணம் 01:
ஆயிரம் கண் உந்தன் தலைதனிலே - கொண்டு
ஆள்கின்ற உமையவள் என மகிழ்வேன்
தாய் இரங்காயோ நீ என்றழுதே - என்
தலையினில் கற்பூரத் தணல் சுமப்பேன்
சரணம் 02:
ஆவணி ரேவதி கொடி எழுவாய் - நீ
அனு தினம் வீதியில் வலம் அருள்வாய்
கா மகிழ் வேப்பிலை உடன் உருவாய் - என்
கண்களில் நீர் வர நீ வருவாய்
சரணம் 03:
இலுப்பையின் மர நிழல் பூத்தவளே - எம்
இல்லம் எல்லாம் சக்தி ஆனவளே
கலப்பையின் நுனியிலும் நீ இருப்பாய் - என்
கவி பொழி நாவிலும் நீ சிரிப்பாய்
சரணம் 04:
காப்பணிந்தேன் நீ இரங்கவில்லை - என்
காலது தீ உண்ண இரங்கவில்லை
நாப்பிறழாத என் வாயினிலே - அம்மா
நான் சூலம் பூட்டினால் இரங்குவையோ?
02/08/2024
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: